அரசு பள்ளியில் குழந்தைகள் தின கொண்டாட்டம் கோலாகலம்

0
84

முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்தநாளான நவம்பர் 14ம் தேதி, இந்தியாவில் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளி மற்றும் அங்கன் வாடிகளில் குழந்தைகள் தினம் கொண்டாட்டம் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் மணல்மேடு ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியின் குழந்தைகள் தின கொண்டாட்டம்:

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 131வது பிறந்தநாள், அவரது நினைவாக இன்று குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இதற்குக் காரணம், குழந்தைகள் மீது நேரு அளவற்ற பாசம் வைத்திருந்தது தான்.

இந்த நிலையில், தமிழ் நாட்டில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் அங்கன் வாடிகளில் குழந்தைகள் தினம் கொண்டாட்டம் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், விழுப்புரம் மாவட்டம் மணல்மேடு ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியின் குழந்தைகள் தின கொண்டாட்டம்  மிகவும் விமர்சியாக ஜவஹர்லால் நேருவின் வேடம் இட்டு அழகிய தமிழ் மொழியில் மழைகள் பேசியுள்ளனர்.

இதற்கிடையே, ஜவஹர்லால் நேரு பற்றி கட்டுரைகள், கதைகள் மற்றும் கவிதைகள் எழுதி  இந்த குழந்தைகள் தின கொண்டாட்டத்தை மிகவும் சிறப்பு மிக்க நாட்களாக மாற்றி உள்ளனர். இங்கு பயிலும் குழந்தைகளும், ஆசியர்களும்.

அரசு அங்கன்வாடி மையத்தில் குழந்தைகள் தின கொண்டாட்டம்:

மணல்மேடு ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியினைப் போல், சென்னை காட்டுப்பாக்கம் ஊராட்சி கே.கே.நகர் பகுதிக்கு உட்ப்பட்ட அங்கன்வாடி மையத்தில் குழந்தைகள் தின கொண்டாட்டம் மிகவும் கோலாகலமாக கொண்டாடினார்கள்.

அங்கன்வாடி மையத்தில் உள்ள ஆண் பிள்ளையின் சட்டையில், நேரு மாமா போன்று ரோஜா பூவுடன் இட்டு  பிள்ளைகளை அலங்கரத்து மிகவும் சிறப்பாக குழந்தைகள் தினத்தைக் கொண்டாடினார்கள். அதுமட்டுமின்றி, குழந்தைகளுக்கு பல போட்டிகள் வைத்து பரிசுப் பொருட்களும் கொடுத்து கொண்டாடினார்கள்.

மேலும், இந்தியாவில் குழந்தை தொழிலாளர்களும் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாமல், அனைத்துக் குழந்தைகளும் அடிப்படை கல்வி பெற்று முழு பாதுகாப்புடன் அனைத்து உரிமைகளையும் பெற வேண்டும் என்பதே குழந்தைகள் தின விழாவின் நோக்கம். இந்தியாவில் வாழும் அனைத்து குழந்தைகளுக்கும் வணக்கம் அமெரிக்க சார்ப்பில் இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம்.

உமாமகேஸ்வரி (வணக்கம் அமெரிக்க மற்றும் மக்கள் ஊடக மையம் செய்தியாளர்)

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here