“காக்ரோச் சேலஞ்ச்”

0
260

இன்றைய இளைய தலைமுறையினர் அதிகமாக சமூகவலைதளங்கள் பயன்படுத்தி வருகின்றனர். அந்த சமூகவலைதளங்களில் புதுப் புது வகையான சவால்களை பதிவிட்டு பலர் அந்த சவால்களில் கலந்து கொண்டு தங்களது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

சமீபத்தில் கூட சமூகவலைதளங்களில்’10 இயர் சேலஞ்ச் ‘மற்றும் ‘கிகி சேலஞ்ச்’ போன்ற சேலஞ்ச்களில் பலர் அந்த கலந்து கொண்டு தங்களது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் பதிவிட்டனர்.தற்போது ஒரு புதிய சவால் ஒன்று சமூக வலைத் தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கரப்பான் பூச்சியை முகத்தில் ஓட விட்டு அதை செல்ஃபி எடுப்பதுதான் ‘காக்ரோச் சேலஞ்ச் ‘.

பலருக்கு கரப்பான் பூச்சி என்றாலே பயமும் அருவருப்பும் அதிகமாக இருக்கும். பலர் அதைப் பார்த்தால் பயந்து பல அடி தூரம் ஓடி விடுவார்கள்.

எனவே அந்த பயத்தைப் போக்கவே இந்த சவால் என கூறி பலர் இதில் கலந்து கொண்டு தங்களது புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலிதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.இந்த ‘காக்ரோச் சேலஞ்ச் ‘ முதன் முதலில் பர்மாவைச் சேர்ந்த இளைஞர் அலெக்சன் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here