விபத்தில் சிக்கி தவிக்கும் அகதிகள்!

0
142

ஆப்ரிக்க நாட்டை சேர்ந்த  அகதிகளை ஏற்றி சென்ற படகு துனிசியா கடற்பகுதியில்  கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 80க்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

ஆப்ரிக்க நாட்டை சேர்ந்த 80க்கு மேற்பட்ட அகதிகள் சிலர், லிபியாவிலிருந்து ஐரோப்பா நோக்கி படகு ஒன்றில் சென்றுள்ளனர்.  அப்போது படகு துனிசியா கடற்பகுதி அருகே வந்தது,  படகில் அதிக எடை காரணமாக திடீரென கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.

இதனை பார்த்த துனிசியா மீனவர்கள், வெள்ளத்தில் தத்தளித்து கொண்டிருந்த 4 பேரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இருப்பினும் அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த கோர விபத்தை உறுதி செய்துள்ள, ஐநா அகதிகள் முகமை, விபத்தில் 80க்கு மேற்பட்டோர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளது.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here