பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் நிலநடுக்கம்

0
211

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மீண்டும் நிலநடுக்கத்தால் 38 பேர் உயிரிழந்த அதே பகுதியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர்.

மீண்டும் நிலநடுக்கம்:

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மிர்பூரில் கடந்த செவ்வாய் அன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பல கட்டிடங்கள் இடிந்தன. சாலை போன்ற உள்கட்டமைப்புக்கள் சேதமடைந்தன. 38 பேர் உயிரிழந்ததோடு 700 பேர் காயமடைந்தனர். இந்நிலையில் இன்றும் மீண்டும் அதே பகுதியில் 12 கிலோ மீட்டர் ஆழத்தில் 4 புள்ளி 4 என்ற ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் வீடுகளை விட்டு பதற்றத்தோடு வெளியேறி தெருக்களில் தஞ்சம் அடைந்தனர். லாகூர், இஸ்லாமாபாத்திலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. முந்தைய நிலநடுக்கத்தில் ஏற்கெனவே விரிசலாகி பலவீனமான கட்டிடங்களில் தற்போதைய நிலநடுக்கம் இடிபாடுகளை ஏற்படுத்தியது. அதில் சிக்கியவர்களை மீட்குப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here