பின்லாந்து பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்ட தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

0
191

பின்லாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அங்குள்ள ஆசிரியர் பயிற்சி கல்லூரியை பார்வையிட்டார்.

அரசு பயணம்:

7 நாள் சுற்றுப்பயணமாக பின்லாந்து சென்றுள்ள தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அங்குள்ள பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றார். அங்கு கையாளப்படும் கற்றல் மற்றும் கற்பித்தல் முறைகள் குறித்தும் ஆய்வு செய்து வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக அந்நாட்டின் துர்க் பகுதியில் அமைந்துள்ள ஆசிரியர் பயிற்சி கல்லூரியை பார்வையிட்ட அமைச்சர், அங்கு ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் கற்றல் மேம்பாட்டு பயிற்சி குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது தமிழக பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் ப்ரதீப் யாதவ் மற்றும் கல்வி அதிகாரிகள் உடனிருந்தனர். தொடர்ந்து பின்லாந்து நாட்டின் கல்வி அமைச்சரையும் சந்தித்து, அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த சந்திப்பில் அந்நாட்டிற்கான இந்திய தூதர் வாணி ராவ், உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளனர்.

பின்லாந்து நாட்டு கல்வி அமைச்சரை சந்தித்தார் தமிழக அமைச்சர்:

பின்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அந்நாட்டு கல்வி அமைச்சரை சந்தித்துப் பேசினார்.

தமிழகத்தில் பள்ளிக் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்காக, பின்லாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அங்கு கல்வி மற்றும் கற்பித்தல் முறை குறித்து அமைச்சர் கோட்டையன் அறிந்து வருகிறார்.

பின்லாந்து நாட்டின் , கல்வி மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சரை சந்தித்த தமிழக அமைச்சர்:

ஐந்தாம் நாள் பயணத்தில் அந்நாட்டு அறிவியல், கல்வி மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் ஹண்ணா கோ இன் மற்றும் துறையின் செயலர் அனிதா லக்கி கோயன், பன்னாட்டு தொடர்பு அதிகாரி ஜானா பாலா ஜாவி ஆகியோரை சந்தித்து செங்கோட்டையன் கலந்துரையாடினார்.

பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவும் அப்போது உடன் இருந்தார். சூழ்நிலையியல் விவசாயம் குறித்து அறிந்து கொள்ள அங்குள்ள வேளாண்மை பண்ணைக்கும் சென்று பார்வையிட்டார்.

முன்னதாக துர்க் பகுதியில் அமைந்துள்ள ஆசிரியர் பயிற்சி கல்லூரியை பார்வையிட்ட அமைச்சர், அங்கு ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் கற்றல் மேம்பாட்டு பயிற்சி குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here