உகாண்டாவில் நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம்:

0
291

வாழ்நாளிலேயே முதன் முறையாக காலணிகள் அணிந்த உகாண்டா பெண் உற்சாகத்தில் துள்ளி குதித்து நடனமாடிய  காட்சிகள் மக்களிடையே நெகிழ்ச்சியே ஏற்படுத்தீயுள்ளது.

துள்ளி குதிக்கும் உகாண்டா பெண்:

பயணத்தின் சுவையை அறிந்த லாரா என்ற பெண், உகாண்டாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார், அங்கு உகாண்டாவில் பெண் ஒருவர் வெறும் காலில் நிற்பதைக் கண்டார். லாரா அந்த பெண்ணிடம் காலணி அணியவில்லையா? எனக் கேட்டபோது, தன் வாழ்நாளிலேயே காலணி அணிந்ததில்லை என அப்பெண் பதிலளித்தார்.

இதைக் கண்டு நெகிழ்ந்த லாரா, தனது ஷூக்களில் ஒரு ஜோடியை அப்பெண்ணுக்கு தானமாக வழங்கினார். லாராவின் ஓட்டுநர் ஷூக்களை அணிவிக்க, அப்பெண் புன்னகை பூத்து, மகிழ்ச்சி பொங்க உற்சாகத்தில் துள்ளி நடனமாடினார். புதிய காலணிகளோடு பாதத்தை தரையில் தட்டித் தட்டி மகிழ்ந்தார்.

இந்த உகண்டாவின் நெகிழ்ச்சி சம்பவம் குறித்து கடந்த 15-ம் தேதி சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here