பெரு நாட்டில் நடந்த அகழாய்வில் 3800 ஆண்டுகள் பழமையான சுவர்சித்திரம் கண்டுபிடிப்பு

0
55

பெரு நாட்டில் நடைபெற்று வரும் அகழாய்வில் மூவாயிரத்து 800 ஆண்டுகள் பழமையான சுவர்சித்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க கண்டத்தின் பழமையான நாகரீகம்:

பெரு நாட்டிலுள்ள விசாமா நகரில் 2007ம் ஆண்டு முதல் அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருகிறது. அமெரிக்க கண்டத்தின் பழமையான நாகரீகம் எனக் கூறப்படும் கேரல் நாகரீகத்தின் எச்சங்கள், நகரமைப்பு, கட்டிடங்கள் உள்ளிட்டவற்றின் சான்றுகள் அங்கு கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் விசாமா அகழாய்வு பகுதியில் தற்போது பழமையான சுவர்சித்திரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மனிதனின் தலை மீது தேரை ஒன்று அமர்ந்திருப்பது போல் வரையப்பட்டுள்ள அந்த ஓவியம், வறட்சிக் காலத்தில் தண்ணீர் வருவதை குறிக்கும் வகையில் வரையப்பட்டிருக்கலாம் என தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here