உணவும் – மருந்தும் – ஆரோகியமான ’ரசம்’

0
626

உயிர் இன்றும் என்றும் ஆராயப்படுவதாகவே  இருக்கிறது . உடலாகிய கருவியை இயக்கும் சக்தியாக உயிர் உள்ளது. உயிர் சக்தியினால் உந்தப்பட்டே இவ்வுலக வாழ்வை நாம் அனைவரும் வாழ்ந்து வருகிறோம் அன்றாடம் உயிருக்கு ஊட்டம்  அளிப்பது எது? என சித்த மருத்துவம் மிக எளிதாக விளக்குகிறது .

அவை- சாரம் (Secretions  from our body  which helps to digest the food ) , ரத்தம் (Blood)

தசை (Muscles) கொழுப்பு (Lipids),  நரம்பு (Vessels), எலும்பு (Bone), மூளை (Brain)  (மஜ்ஜை) (Stem cells) எனும்  ஏழு  உடல்கட்டுகள் ஆகும். இந்த தாதுக்கள் கட்டுப்பாடாக  யாக்கப்பட்டிருத்தலின் ”யாக்கை” என்று பெயர்.

ஏழு தாதுகளில் ஆறு தாதுக்கள்  உடலில் வேண்டிய அளவு இருந்தால் மூளை(Brain) (மஜ்ஜை ( BONE MARROW) சரியாக இருக்கும்.

சுவைகள் ஆறு.  அவை இனிப்பு (sweet), புளிப்பு(sour), உப்பு (salt), காரம்(pungent) , கசப்பு (bitter),  துவர்ப்பு (astringent)  இவை ஆறும் ஆறு  உடல் தாதுக்களை வலுப்படுத்தும்.

அதாவது இரத்தத்தை வலுப்படுத்த துவர்ப்பும், சாரம் (உமிழ் நீர்) முதலியன சுரப்புகளை வலுப்படுத்த  காரமும், தசையை வளர்க்க இனிப்பும், கொழுப்பும்  தர புளிப்பும் நரம்பை வலுப்படுத்த கசப்பும் , எலும்பை வலுப்படுத்த உப்பும்  உணவில் உள்ளன.

எனவே தான் தமிழர் உணவில் ”அறுசுவை உண்டி” வழக்கமானது.  உடலில் ஏழு தாதுக்கள் உள்ளன. அவற்றை வளர்க்க உணவில் ஆறு சுவைகள் உள்ளன மருத்துவரிடம் உள்ள மருந்து இந்த ஆறு சுவையில் அடங்கும். அடுப்பங்கரை ஐந்தறைப் பெட்டியில் உள்ளது தான், மருத்துவனின் மருந்துப் பெட்டியிலும் இருக்கின்றது.  உலகத்துப் பொருள்கள் எல்லாம் இந்த ஆறில் அடங்கும். உணவும் மருந்தாம்! மருந்தும் உணவாம்!.

அன்றாடம் நாம் பயன்படுத்தும் உணவு வகைகள் எப்படி உருவானது என்பது சுவாரஸ்யமானது.  அந்த வகையில் சித்த மருத்துவத்தின் பார்வையில் மிகவும் எளிய உணவு வகையான ”இரசம்” என்பது குறித்து காண்போம்

ரசம் எளிதில் ஜீரணமாகும் எளிமையான உணவு.

 இதில் சேரும் முக்கியப்  பொருட்கள்

 • புளி – Tamarinds indicia – Tamarind
 • சீரகம் – cuminum cyminum – cumin seeds
 • பூண்டு – Allium satirum – garlic
 • மிளகு – pepper nigram – black pepper
 • பெருங்காயம் – ferula asafetida – asafetida

புளி – Tamarinds indicia – Tamarind 

 புளி வேறு பெயர்:  ஆம்பிரம்

பயன்:

 • இது மலத்தை இளக்கி இலகுவாக வெளியே தள்ளும்
 • வாந்தி அஜீரணம் ஏற்படாமல் தடுக்கும்.
 • உடம்பில் உள்ள அதிகப்படியான உப்பை வெளியேற்றும் குணம் உடையது.
 • கவனிக்க: ” creative ” எனப்படும் உப்பின் அளவு உடலில் அதிகமாகும். நோயாளிகளுக்கு அந்த உப்பின் அளவு குறைக்க, இன்றளவும் புளிய மரத்தின் இலைகள் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

சீரகம் – cuminum cyminum – cumin seeds 

சீரகம் வேறு பெயர்: போஜன் குபோரி அசை

பயன்: சீரகம்= சீர்+ அகம்

 • இது வயிற்று மந்தத்தை நீக்கி பசியை உண்டாக்கும்.
 • உணவைச் செரிக்குமாறு செய்யும்.
 • வயிற்றுவலி, கல்லீரல் நோய், இருமல், ஆஸ்துமா, மூக்கு நீர்பாய்தல் ஆகிய நோய்களை குணப்படுத்த வல்லது.
 • உடலுக்கு வலுவைத் தந்து கண்ணுக்கு குளிர்ச்சியைத் தரும்.

 மருத்துவக் குறிப்பு:

 • சீரகத்தை வறுத்து அரைத்து சலித்து கற்கண்டு பொடியுடன் சேர்த்து இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டால் தொண்டைப் புண் மற்றும் இருமல் தீரும்.
 • சீரகத்தை நல்லெண்ணெய் விட்டு காய்ச்சி கொதித்தவுடன் ஆற விட்டு பின் தலையில் தேய்த்து முழுகி வர, தல வலி ,வாந்தி, மயக்கம், கண் வியாதிகள் தீரும்.
 • சீரகத்தைப் பொடித்து வெண்ணெயுடன் 2 கிராம் அளவு உண்டால் வயிற்று எரிச்சம் தீரும்.

பூண்டு – Allium satirum – garlic:

பூண்டு வேறு பெயர்கள்:  இலசுனம்,காயம், வெள்ளுள்ளி

பயன்:

 • வயிற்று உப்புசம், வயிற்றுப் புழு, நாட்பட்ட இருமல் தீரும்.
 • உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்பைக் குறைக்கும்.

மருத்துவக் குறிப்பு:

 • இலசுன தாபிதம்: குழந்தைகளுக்கு அடிக்கடி வரும் பிரச்சனைகளில் ஒன்று தான் tonsil வீங்குதல் அதற்காக எளிமையான தீர்வு பூண்டு ஆகும்.
 • முதலில் பூண்டை அரைத்து பிழிந்து ஒரு டேபிள் ஸ்பூன் சாறு எடுத்து 6 டேபிள் ஸ்பூன் தேனுடன் கலந்து வைத்துக் கொண்டு சிறிதளவு விரலில் tonsil உள்ள இடத்தில் தொண்டையில் இருபுறமும் தடவ ஒரு வாரத்திற்குள் நல்ல பலன் கிடைக்கும்.
 • பித்தப்பை கல் தீர சித்த மருத்துவத்தில் தரும் மருந்தில் பூண்டு ஒன்று முக்கிய பொருளாகும்.
 • இது ஒரு அருமருந்தாகும் .பசியைத் தூண்டும். மனவெழுச்சி தரும். உடல் அசதி தீரும் சாதாரண சளி, தும்மல் மூலம் இருமல், காய்ச்சல், காமாலை ஆகிய நோய்கள் வராமல் செய்யும்

மிளகு – pepper nigram  – black pepper

பயன்:

 • மிளகு இது அருமையான மருந்தாகும்.
 • மனவெழுச்சி தரும்.
 • உடக் அசதி தீரும்.
 • சாதரணா சளி, இருமல், காமாலை ஆகிய நோய்கள் தீரும்.

மருத்துவக் குறிப்பு:

 • பூச்சி கொடி மிளகு 10 வெற்றிலை இரண்டு நீர்விட்டு காய்ச்சி அருந்த பூச்சிகளினால் வந்த அலர்ஜி குறையும்.
 • மிளகு சோம்பு சம அளவு எடுத்து பொடி செய்து இரண்டு மடங்கு தேனுடன் தினமும் இரண்டு வேளை உண்ண, மெலிந்த உடல் மற்றும் முதியவர்களுக்கு உண்டாகும் மூலம் தீரும்.

பெருங்காயம் – ferula asafetida –  asafetida

 • பெருங்காயம் இது காந்தசக்தி மிக்கது.
 • வயிற்றில் செரிமானத்திற்கு உதவும் காரங்களை அதிகப்படுத்தும்.
 • இது முக்கியமாக, இரத்தத்தை சூடாக்கி நரம்புகளை பலப்படுத்தும்
 • இதனைப் பொறுத்து பயன்படுத்த வேண்டும்.

தீரும் நோய்கள்:

 • பல்லடி நோய், பாம்பு விஷம், தேள் கடி, அதிக ஏப்பம், கீழான வாய்வு குருதியில் உள்ள நுண்புழு, அதிக குளிர்ச்சி ஏற்பட்டு உடல் வலி தீரும்

மருத்துவக் குறிப்பு :

வறட்டு இருமல் கோழி முட்டை மஞ்சள் கருவுடன் சிறிது பெருங்காயத்தை மிக அளவு கொடுக்க, வறட்டு இருமல் தீரும்.

 • கோழிமுட்டை மஞ்சள் கருவுடன், பொரித்த பெருங்காயத்தை மிளகளவு கொடுத்தால் வரட்டு இருமல் குறையும்.
 • சிறிதளவு பெருங்காயத்தையும் நல்லெண்ணெயில் விட்டு காட்டியபின் காதில் விட காதுவலி தீரும்.
 • பெருங்காயம் சிறிதளவு உளுந்து சேர்த்து, பொடித்து தீயிலிட்டுப் புகையை நுகர்ந்து வர, இரைப்பு மற்றும் வயிற்று உப்புசம் ஆகியவை தீரும்.

குறிப்பு:

ரசம் வைக்கும் போது, கறிவேப்பிலை போட்டு தாளித்து செய்யும் போது அதனுடன் ,5 வெற்றிலையை சிறு துண்டாக ஆக்கி, அதில் போட்டு ரசம் வைத்து சாப்பிட்டு வர, குழந்தைகள் முதல் பெரியவர் நோய் எதிர்ப்புத் திறன் அதிகரிக்கும்..

 • நாட்டப்பட்ட வியாதிகள் அண்டாது.
 • குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் எலும்புகள் வலுப்பெறும்.
 • பூப்பு நின்ற மகளிர்க்கு இது ஒரு வரப்பிரசாதம்.

  -சித்த மருத்துவர் செல்வகுமார்

                                                                                   – சேலம்       

               

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here