நைஜீரியா நாட்டின் சட்டப்பேரவையில் புகுந்த பாம்பு, அச்சமடைந்த உறுப்பினர்கள்!

0
167

நைஜீரியாவின் ஆண்டோ மாகாண சட்டப்பேரவை கட்டிடத்தின் கூரையிலிருந்து பாம்பு ஒன்று விழுந்ததால், அச்சமடைந்த  அலறிய உறுப்பினர்கள் அவையை விட்டு வெளியேறினர்.

நைஜீரியா நாட்டில், நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில், கட்டிடத்தின் மேற்கூரையிலிருந்து திடீரென பாம்பு ஒன்று விழுந்தது. சபாநாயகர் அமர்ந்திருக்கும் இடத்துக்கு நேர் மேல்புறத்தில் கூரையை உடைத்துக் கொண்டு விழுந்த பாம்பை பார்த்து பீதியடைந்த உறுப்பினர்கள், அவசர அவசரமாக கட்டிடத்தை விட்டு வெளியேறினர்.

மேலிருந்து விழுந்த பாம்பு யாரையும் கடிக்கவில்லை எனவும், யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்துள்ள சட்டப்பேரவை செய்தி தொடர்பாளர், இருப்பினும் பாம்பு விழுந்ததால் ஏற்பட்ட குழப்பத்தால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அடுத்த நாள் அதே கட்டிடத்தில் நடைபெற்ற கூட்டத்தின் போது, கட்டிடத்தின் பல இடங்கள் சேதமடைந்திருப்பதால் உறுப்பினர்கள் தயக்கம் காட்டிய நிலையில் அனைத்து கூட்டங்களும் ஒத்திவைக்கப்பட்டன.

 

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here