சுற்றுசூழல் விருதினை நிராகரித்த கிரெட்டா தன்பர்க் சிறுமி

0
51

சுற்றுசூழல் பாதுகாப்புக்காக குரல் எழுப்பி வரும் சிறுமி கிரெட்டா தன்பர்க்,  நார்டிக் கவுன்சில் அறிவித்துள்ள ‘சுற்றுசூழல் விருதினை’ நிராகரித்துள்ளார்.

சுற்றுசூழல் விருதினை நிராகரித்த சிறுமி:

ஸ்வீடன் நாட்டை சேர்ந்த 16 வயது சிறுமி, வெள்ளிக்கிழமைகளில் தனது வகுப்புகளை புறக்கணித்து விட்டு கடந்த 2018ம் ஆண்டு முதல் அந்நாட்டு நாடாளுமன்றம் முன் சுற்றுசூழல் பாதுகாப்புக்காக போராட்டம் நடத்தி வருகிறார்.

உலக முழுவதும் பிரபலமடைந்த கிரெட்டா தன்பர்க் சிறுமிக்கு, சுற்றுசூழல் விருது’ வழங்க 87 நாடுகளை கொண்ட நார்வே கவுன்சில் முன்வந்தது.  ஆனால் கவுன்சிலின் முடிவுக்கு நன்றி தெரிவித்துள்ள தன்பர்க், விருது மற்றும் பரிசு தொகை சுமார் 36 லட்சத்து 90 ஆயிரம் ரூபாயை வாங்க மறுத்துள்ளார்.

மேலும் சுற்றுசூழல் இயக்கத்துக்காக விருதுகளை வழங்காமல், தற்போதுள்ள அறிவியலை பயன்படுத்தி, அதிகாரத்தில் இருப்போர் சுற்றுசூழலை பாதுகாத்திட கவனம் செலுத்தும்படி தன்பர்க் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here