உலகிலேயே மிகப் பெரிய காபி கோப்பை – கின்னஸ் சாதனை:

0
198

கொலம்பியாவின் சின்சினா (Chinchina) என்ற பகுதியில் காபி அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் உள்ளூர் விவசாயிகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் அங்கு கின்னஸ் சாதனை நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது.

கின்னஸ் சாதனை:

சின்சினா  பகுதியில் அதிக அளவில் காபி உற்பத்தி செய்யப்பட்டு வருவதால் காபியை கொண்டு  கின்னஸ் சாதனை படைப்பதற்காக திட்டமிட்டுள்ளனர். அதன் காரணமாக  20 டன் வரை காபி நிரம்பும் அளவுக்கு உலகிலேயே பெரிய காபி கோப்பை உருவாக்கப்பட்டது.

மேலும் உலகிலேயே அதிகமானோர் கலந்து கொண்ட காபி சுவைக்கும் நிகழ்ச்சியும் கொலம்பியாவில் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில்   பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சி பற்றி கூடுதல் தகவல்களைப் பெற்ற பிறகு சாதனை குறித்து அறிவிக்கப்படும் என்று கின்னஸ் உலக சாதனைகள் அமைப்பின் சார்பில் இதில் கலந்து கொண்ட நிர்வாகி தெரிவித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here