குருபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடம்பெய்ர்ந்தார்

0
228

நவகிரகங்களில் முதன்மையானவராக கருதப்படும் குருபகவான் இன்று அதிகாலை 3. 49 மணிக்கு விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். இதையொட்டி தமிழ்நாட்டில் பல்வேறு ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.

விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடம்பெய்ர்ந்தார் குருபகவான்:

சென்னை பாடியில் உள்ள பிரசித்திபெற்ற குருஸ்தலமாக விளங்கும் திருவலிதாயம் என்றழைக்கப்படும், அருள்மிகு ஜெகதாம்பிகை உடனுறை திருவல்லீஸ்வரர் கோவிலில், குருபெயர்ச்சியை முன்னிட்டு இன்று அதிகாலை 3.48 மணிக்கு லட்சார்ச்சனை தொடங்கி நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். 3 நாட்கள் நடைபெறும் லட்சார்ச்சனைக்குப்பின், வரும் 31 ந்தேதி வியாழக்கிழமையன்று காலை 8 மணிக்கும் மாலை 4 மணிக்கும் குருபரிகார ஹோமம் நடைபெற உள்ளதாக ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சுப கிரகம் என அழைக்கப்படும் குருபகவான்:

ஜோதிடம் மற்றும் ஆன்மீகத்தில் நவக்கிரங்களில் முதன்மையான சுப கிரகம் என அழைக்கப்பட்டு, நற்பலன்களை தரக்கூடிய கிரகமாக குருபகவான் பாவிக்கப்படுகிறார். குரு பகவான் ஆண்டுதோறும் ஒரு ராசியில் மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆவதே குருபெயர்ச்சியாக அழைக்கப்படுகிறது. குருபார்க்க கோடி நன்மை என்று போற்றப்படும் குருபகவான் இன்று அதிகாலை 3.49 மணிக்கு விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி ஆனார்.

இதையொட்டி நவக்கிரங்களில் குருபரிகார தலமாக விளங்கும் திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி அருள்மிகு ஆபத் சகாயேசுவரர் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் குருபகவானுக்கு இன்று அதிகாலை குருபெயர்ச்சி சிறப்பு யாகம் நடைப்பெற்றது.

தொடர்ந்து மஞ்சள் பொடி, திரவியப்பொடி, மற்றும் பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் சந்தனம் போன்ற திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் குருபகவானுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரம், தீபாரதனை நடைப்பெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே வரிசையில் காத்திருந்து குருபகவானுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here