”மாற்றான்” படம் பானியில் ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள்

0
73

செனேகல் நாட்டில், உடல் ஒட்டிப்பிறந்த இரட்டை மகள்களை, இங்கிலாந்து அழைத்து சென்ற தந்தை ஒருவர், அவர்களை மழலையர் பள்ளி வகுப்பில் சேர்த்துள்ளார்.

”மாற்றான்” படம் பானியில் பிறந்த இரட்டை குழந்தைகள்:

மேற்கு ஆப்ரிக்க நாடான செனேகலை சேர்ந்த இப்ராகிமா நிடியாயீ என்பவருக்கு உடல் ஒட்டி பிறந்த இரு மகள்கள்  உள்ளனர். அண்மையில் அவர் தனது மகள்களை இங்கிலாந்து அழைத்து சென்று இருவரையும் தனித்தனியே பிரிக்க மருத்துவமனையில் அனுமதித்தார்.

உடல் ஒட்டி பிறந்த இருவருக்கும் தனித்தனி இதயம் மற்றும் முதுகெலும்பு இருந்தும், கல்லீரல், சிறுநீர்ப்பை, செரிமான உறுப்புகள் ஆகியன ஒன்றாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் இருவரையும் பிரிக்க முடியாது என்றும், அவர்களது வாழ்நாள் குறுகியது எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இருப்பினும் மனம் தளராத  இப்ராகிமா, தனது மகள்களை மகிழ்ச்சிப்படுத்தவும், சாதாரண குழந்தைகளை போல வளரவும் கர்டிப்பில் உள்ள மழலையர் வகுப்பில் சேர்த்துள்ளார்.

தற்போது இவர்களின் உடல் நிலை தேறிவருவதால், மகிழ்ச்சியடைந்துள்ள அவர், செப்டம்பர் மாதம் முதல் முழு நேர மழலையர் வகுப்பில் மகள்களை சேர்த்து விட முடிவு செய்துள்ளார்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here