இமயமலையில், ஆதிமனிதர்களான டெனிசொவன்களின் கால் தடங்கள்: நேபாள அரசு விளக்கம்:

0
285

இந்திய ராணுவத்தைச்  சேர்ந்த  மலையேற்ற வீரர்கள் , இமயமலையில் கடந்த 9-ஆம் தேதி ராட்சத அளவிலான கால் தடங்களைப் பார்த்துள்ளனர்.அது குறித்து விசாரணை மேற்கொண்ட நேபாள ராணுவத்தினர்,அது ஆதிமனிதர்களில் ஒரு வகையைச் சேர்ந்த டெனிசொவன்களின் கால் தடங்களாக இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர்.

இந்திய ராணுவத்தின் ஒரு குழுவினர் இமயமலையில் ஏறிக்கொண்டிருந்த போது, கால்தடம்  32-க்கு 15 அங்குலம் கொண்ட ராட்சஷ கால்தடங்களைக்  கண்டனர்.

 உள்ளூர்வாசிகளுடன்  இணைந்து,  அந்தக்  கால் தடம் என்னவென்பதை  அறிய முயற்சி செய்தார்கள்.  அப்போது அது காட்டுக் கரடியின் கால் தடம் என சிலர் தெரிவித்தனர்..

இன்னும் சிலரோ, எட்டி எனப்படும் ராட்சத பனிமனிதனின் கால்தடங்களாக இருக்கலாம் என்றனர்.நேபாள மக்கள் இந்தப் பனிமனிதனை கடவுளாகவே கருதுகின்றனர்.

இந் நிலையில், நேபாள ராணுவ செய்தி தொடர்பாளர் பிக்யான் தேவ் பாண்டே கூறுகையில் , அது ஆதிமனிதர்களில் ஒரு வகையைச் சேர்ந்த டெனிசொவன்களின் கால் தடங்களாக இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளளார். டெனிசொவன்கள் ஆசியாவில் வாழ்ந்த ஒரு விசித்திரமான மனித இனம். இப்போதைய நவீன மனித இனம் உலகெங்கும் பரவுவதற்கு முன்பு பல பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் இவர்கள் வாழ்ந்தார்கள் என்று கூறப்படுகிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here