கலை நிகழ்ச்சிகளுடன் களைகட்டிய அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் சுதந்திர தினம் கொண்டாட்டம்

0
97

இந்தியா நாட்டின் 73-வது சுதந்திர தினம் கொண்டாட்டம் இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடி வருகின்றன. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட MBN அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் பல கலை நிகழ்ச்சிகளுடன் நாட்டின் சுதந்திர தினத்தை  கோலாகலமாக கொண்டாடினார்கள்.

களைகட்டிய அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி:

குரோம்பேட்டையில் உள்ள MBN அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளில் 1800 மாணவிகள் மற்றும் 70 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றார்கள். இந்திய நாட்டின் 73-வது சுதந்திர தினத்தையோட்டி பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் பெற்றோர்கள், மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் நாட்டின் சுதந்திர தினத்தில் கலந்து கொண்டு காலை 8.40 மணியளவில் கொடி ஏற்றி, மாணவிகளுக்கு இனிப்பு வழங்கி இந்த நன்னாளை கொண்டாடினார்கள். அதுமட்டுமின்றி கலை நிகழ்ச்சிகளில் மாணவிகள் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தார்கள்.

பள்ளியின் சிறப்பு நிகழ்ச்சிகள்:

சுதந்திர தினம் கொண்டாட்டம் என்பதால் சுதந்திரத்தைப் பற்றிய கவிதைப் போட்டிகள், கட்டுரைப் போட்டிகள், பேச்சுப் போட்டிகள் என பல போட்டிகள் நிகழ்ந்தன. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டும் பரிசுகளும் வழங்கப்பட்டன.

போட்டிகள் மட்டுமின்றி கலை நிகழ்ச்சிக்காக மாணவிகள் தமிழகத்தின் பாரம்பரிய நடனமான ”பாரதம் நாட்டியம்” ஆடி நிகழ்ச்சியினை மிகவும் சிறப்பித்தனர். இவ்வாறு வண்ணம் மிக்க சுதந்திர தினம் குரோம்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் கொண்டாட்டம் களைகட்டியது.

-உமாமகேஸ்வரி(வணக்கம் அமெரிக்க செய்தியாளர்)

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here