என்றும் நட்பு நாடு தான் இந்தியா – ஈரான் அதிபர்

0
71

ஈரான் மீது பொருளாதார தடை விதித்த அமெரிக்கா , எண்ணெய் இறக்குமதி விவகாரத்தில் இந்தியா போன்ற நாடுகள் ஈரான் உடனா ஒப்பந்ததில் இருந்து விலகியது.  இந்நிலையில் இந்தியா தனது நலனை கருத்தில் கொண்டு செயல்படும் என நம்புவதாக ஈரான் கூறியுள்ளது.

இந்தியா ஈரான் நட்பு:

ஈரான் மீது பொருளாதார தடை விதித்த அமெரிக்கா, அந்நாட்டிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்து கொள்ள இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு வழங்கிய சலுகையை மே 2ஆம் தேதியுடன் ரத்து செய்தது. இதன் காரணமாக ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை இந்தியா நிறுத்திக் கொண்டது.

இதுதொடர்பாக பேசியுள்ள இந்தியாவுக்கான ஈரான் தூதர் அலி செகேனி (Ali chegeni), அமெரிக்காவின் அழுத்தத்தைக் மறைமுகமாக குறிப்பிட்டு, மற்ற நாடுகள் உடனான இந்தியாவின் உறவு, எந்த வகையிலும் ஈரானுக்கு எதிரானது அல்ல என்று கூறினார்.

இந்திய அரசின் முடிவுகளுக்கு மதிப்பு அளிப்பதாகத் தெரிவித்த அலி செகேனி, இருப்பினும் நட்பு நாடு என்கிற அடிப்படையில் எதிர்காலத்தில் இந்தியா எண்ணெய் இறக்குமதியை தொடரும் என்று எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார்.

நாட்டின் நலனுக்கேற்றவாறு இந்தியா செயல்படும் பட்சத்தில், அந்நாட்டின் ஆற்றல் பாதுகாப்பின் காவலனாக ஈரான் இருக்கும் என்றும் அலி செகேனி திட்டவட்டதாகத் தெரிவித்தார்.

ரூபாய், அல்லது ஐரோப்பிய பணத்தின் அடிப்படையிலோ, பண்டமாற்று முறையிலோ கூட எண்ணெய் இறக்குமதி செய்ய தயார் என்று அவர் கூறினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here