இந்திய விமானப்படைத் தாக்குதல்: 130 முதல் 170 பயங்கரவாதிகள் பலி

0
323

பாலக்கோட் பகுதியில் ஜெய்ஸ்-இ- முகமது பயங்கரவாதிகள் மீது பிப்ரவரி 26-ஆம் தேதி இந்தியா நடத்திய விமானத் தாக்குதலில் 130 முதல் 170 பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளனர் என இத்தாலிய பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்
கடந்த பிப்ரவரி 10ஆம் நாள் ஜம்மு காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த இந்திய ராணுவ லாரி மீது ஜெய்ஸ்-இ- முகமது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். அதில் பல ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

அதற்கு பழிவாங்கும் விதமாக, பிப்ரவரி 26ம் தேதி காலை 4.30 மணிக்கு பாகிஸ்தான் எல்லைக்குள்உள்ள பாலக்கோட் பகுதியில்உள்ள ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய விமானப் படை வீரர்கள் தாக்குதல் நடத்தினர்.

இதில் ஏத்தனை பேர் உயிரிழந்தனர்? என எதிர்க்கட்சியினரும் ,பத்திரிகையாளர்களும் கேள்வி மேல் கேள்விகேட்டு வந்தனர்.மத்திய அரசோ, ராணுவமோ சரியான பதில் எதரவில்லை.இந்நிலையில்.அப்போது களத்தில் இருந்த இத்தாலிய பத்திரிகையாளர் ஃபிரான்ஸிஸ்கோ மேரினொ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா நடத்திய விமானத் தாக்குதலில் 130 முதல் 170 பயங்கரவாதிகள் வரை உயிரிழந்திருக்கக்கூடும் என தெரிவித்துள்ளார்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here