முதல் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி…!

0
196

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின், முதல் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 30-ம் தேதி இங்கிலாந்தில் தொடங்க உள்ளதை முன்னிட்டு, தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்திய அணி தனது முதல் பயிற்சி ஆட்டத்தில் நியூஸிலாந்தை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற கேப்டன் விராட் கோலி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

நியூசிலாந்து வீரர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் 40வது ஓவரில் இந்திய அணி 179 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அதனைத்தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 37வது ஓவரில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 180 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அதிகபட்சமாக ராஸ் டெய்லர் டெய்லர் 71 ரன்களும், கேப்டன் வில்லியம்ஸன் 67 ரன்களும் குவித்து வெற்றிக்கு வித்திட்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here