வன்முறையை தூண்டுவதாக அமைச்சர் மீது கமல்ஹாசன் கட்சியினர் புகார்.

0
139

தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வன்முறையை துாண்டுவதாக தலைமை தேர்தல் ஆணையத்தில் மக்கள் நீதிமையத்தின் சார்பில் புகார் அளித்துள்ளனர்.

நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன் சமீபத்தில் அரவக்குறிச்சி தொகுதியில் பிரசாரம் செய்தபோது, சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு ஹிந்து எனக் கூறி விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.

இவருக்கு பல்வேறு அமைப்பினரும், பா.ஜ.க பிரமுகர்களும் எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்து வந்த போதிலும், உடனடியாக எதிர்ப்பை தெரிவித்த, அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ‘கமல்ஹாசன் நாக்கை மக்கள் அறுப்பார்கள்’ என்று எச்சரித்து  விமர்சித்தார்.

இதற்காக மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள், தேர்தல் ஆணையம் சென்று தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது இன்று புகார் கொடுத்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here