அமெரிக்க வாழ் தமிழர்களின் மூலம் உதவி பெறும் அரசு பள்ளியின் சுதந்திர தினக் கொண்டாட்டம்

0
158

அமெரிக்காவில் வாழும் தமிழர்கள், தமிழகத்தில் பல பள்ளிகளுக்கு உதவி செய்து வருகின்றார்கள் அந்த வகையில் உதவி பெறும், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோனேரிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்,  இந்திய நாட்டின் 73-வது சுதந்திர தினத்தை  கோனேரிக்குப்பம் பள்ளியின் படித்த முதல்தலைமுறை பட்டதாரிகளுடன் இந்த சுதந்திர தின கொண்டாட்டம் மிகவும் கோலாகலமாக கொண்டாடியுள்ளனர்.

கோனேரிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி:

இந்தியா சுதந்திரம் பெற்று இன்றுடன் 73-வது ஆண்டு சுதந்திர காற்றை சுவாசிக்க தொடங்குயுள்ளது. இந்த நன்னாளில் காலை 8.40 க்கு கோனேரிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கொடி ஏற்றப்பட்டது. பின்னர்  இனிப்புகள் வழங்கி சுதந்திர தினத்தைச் சிறப்பாக கொண்டாடினார்கள். அதுமட்டுமின்றி  கலை நிகழ்ச்சிகள், திருக்குறள் பயிற்சி மூலம் திருக்குறளை சொல்லும் மாணவர்கள் என பல நிகழ்ச்சிகள் நடந்தன.

இந்திய நாட்டின் 73 வது சுதந்திர தின நன்னாளில், கோனேரிக்குப்பத்தில் அமைந்துள்ள, அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்  படித்த முதல் தலைமுறை பட்டதாரிகளுடன் மிகவும் விமர்சியாக சுதந்திர தினத்தை மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கொண்டாடியுள்ளனர்.

அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கோனேரிக்குப்பம், ஒலக்கூர் ஒன்றியம்,திண்டிவனம் வட்டம், விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த அரசு  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மற்ற பள்ளிகள் போன்று அல்லாமல் சற்று வித்தியாசமான பள்ளியில் சிறப்புகளான  ICT – Computer lab, Karka Math Lab,  Skype Class – Spoken English, திருக்குறள் பயிற்சி, கிராமியக்கலைக்குழு, Pre KG class,  போன்ற தனியார் பள்ளிகளை காட்டிலும் மிகவும் சிறப்பாக செயல்ப்பட்டு வருகின்றது.

கோனேரிக்குப்பத்தின் 73 வது சுதந்திர தினத்தின் கொண்டாட்டம்:

கோனேரிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் காலை 8.40 மணியளவில் கொடி ஏற்றப்பட்டது. பின்னர் கலை நிகழ்ச்சிகளான கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி போன்ற பல நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது. பின்னர் இந்த நிகழ்ச்சியினை சிறப்பிக்கும் வகையில் கோனேரிக்குப்பம் பள்ளியில் படித்த முதல்தலைமுறை பட்டதாரிகளாக கல்லூரி படித்துவரும் சுமார் 16 மாணவர்களுக்கு திரு. பாரிவேல்முருகன்- ஜப்பான் முழுமதி அரக்கட்டளை உதவியோடு, அவர்களின் கல்லூரி கட்டணம் கட்டஉதவி செய்து வருகின்றனர்.  சுதந்திர தினத்தையோட்டி, அந்த  மாணவர்களை பள்ளிக்கு அழைத்து, இன்று விழாவில் பாராட்டி மாணவர்களுக்கு  கல்வி  விழிப்புணர்வு பற்றி பேசியுள்ளனர்.

திருக்குறள் போட்டி:

ஆலும் வேலும் பல்லுக்குறுதி ; நாலும் இரண்டும் சொல்லுக்குறுது”

மேலே கொடுக்கப்பட்டுள்ள நாலாடியரின் சிறப்பை கூறும் வகையில் இன்று திறுக்குறள் உலக முழுவதும் போற்றப்படும் நீதி நூல்களில் ஒன்றாக திகழ்க்கின்றது. இந்த உலக புகழ்பெற்ற திருக்குறளுக்கு சொந்தமாக திகழும் தமிழ்கள் என்ற பெருமை இன்னும் சிறப்பு. அந்த வகையில் கோனேரிக்குப்ப பள்ளியில்  அருட்தந்தை. P.J.XEVIAR அவர்கள்,தமிழ்வளர்க்கும் நோக்கோடு,  திருக்குறள் கற்பிக்க, ஆசிரியர் திரு. தமிழ்மகிழ்நன்  அவர்களை நியமித்து, வாரத்தில் ஒரு நாள் மட்டும் திருக்குறள் பயிற்சி வழங்க, வருடத்திற்கு கோனேரிக்குப்ப பள்ளிக்கு ரூ. 10,000/- ஐ, ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறார்.

அதுமட்டுமின்றி பள்ளியில் உள்ள 125 மாணவர்களுக்கும் 10 முதல் 250 திருக்குறள் கற்றுயுள்ளனர். அவற்றில் 8 மாணவர்கள்    250 முதல் 300 திருக்குளை மனப்பாடமாக சொல்லி பரிசையும் பாராட்டுகளையும் இன்றய விழாவில் சிறப்பித்துள்ளார்கள்.

இந்த திருக்குறள் போட்டியில் 300 திருக்குறளை முடித்த S.சாதனா6ஆம் வகுப்பு மாணவிக்கு பரிசுகள் மாற்றும் பாரட்டுகள் குவிந்தன.

பள்ளிக்கு கிடைத்த பரிசு:

கோனேரிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, சிறந்த பள்ளியாக தேர்வாகியுள்ளது. அந்த மகிழ்ச்சியினை கொண்டாடும் விதமாக, சிறந்த பள்ளியாக தேர்வானதிற்கு, ஆசிரியர்கள் தான் முதன்மை காரணம் என்று  தலைமையாசிரியர்  ஆசிரியர்களை வாழ்த்தி, பொன்னாடை போர்த்தினார்.

சென்றவாரம் கோனேரிக்குப்பம் பள்ளியின் 2018-2019 ஆண்டின், தூய்மைப்பள்ளிக்கான விருது பெற்றது.  இந்த விருதினை பெற்றதர்க்கு தலைமையாசிரியர் சக ஆசிரியர்களை பாராட்டி பொன்னாடையும் அணிவித்தார். ஆசிரியர்கள் தலைமையாசிரியருக்கு பாராட்டு தெரிவித்தார்கள்.

– உமாமகேஸ்வரி (வணக்கம் அமெரிக்க செய்தியாளர்)

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here