கோவக்கார பூனையின் குறும்பு செயல்:

0
284

எஜமானர் திட்டியதால் கோபித்து வீட்டைவிட்டு வெளியபோனது பூனை.  இந்தோனேஷியாவில் இந்த சுவாரஸ்யமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்த பகுதியை சேர்ந்த ஹர்யந்தோ பேர்விர்ரா ரமாதானி  என்பவர் பூனை என்ன செய்தது என  பதிவிட்டுள்ளார்.

“காலையில் , எனது படுக்கையில் பூனை என்னுடைய இயர்போன்களை வைத்து விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அது கடித்து விளையாடியபோது, ஏதேச்சையாக இயர்போன் துண்டிக்கப்பட்டு இரு துண்டுகளாகி விட்டது. நான் அதைப் பார்த்ததும், பூனையை கடுமையாக திட்டினேன். நான் திட்டியதும் பூனை வீட்டை விட்டு வெளியே போய் விட்டது. அதன்பிறகு ஒரு மணி நேரம் கழித்து திரும்பி வந்த அது, எனக்கு ஒரு பொருளை கொண்டு வந்தது. அதாவது இயர்போனை கடித்ததற்காக வருத்தம் தெரிவிக்கும் எண்ணத்தோடு இருந்த அந்தக் குட்டிப்பூனை சிறிய பாம்பு ஒன்றைக் கொண்டு வந்து என் முன்பு போட்டது”.

இவர் இந்நிகழ்வை முகநூல் பக்கத்தில் பகிர்ந்து கொண்ட பதிவை ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் பார்வையாளர்கள் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here