அமெரிக்காவை போல் தமிழகத்திலும் பேட்டரி வாகனங்கள் 7 இடங்களில் 256 சார்ஜிங் மையங்கள்

0
22

உலக வெப்பம் மையம் ஆகுதலை தடுக்கும் விதமாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள திட்டம் தான் பேட்டரி வாகனங்கள். இந்த திட்டத்தின் மூலம் பேட்டரி வாகனங்களின் பயன்பாட்டுக்காக தமிழகத்தில் 7 இடங்களில் 256 சார்ஜிங் மையங்கள் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

மத்திய அரசு அனுமதி:

மோட்டார் வாகனங்களால் ஏற்படும் புகை மாசுவை குறைக்க பேட்டரி வாகனங்களை பயன்படுத்தும்படி மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. இதற்காக தற்போது 62 நகரங்களில் பேட்டரி வாகனங்களுக்காக 2 ஆயிரத்து 636சார்ஜிங்’ மையங்களை அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இதுகுறித்து கூறிய மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், சார்ஜிங்’ மையங்கள் அமைப்பதன் மூலம் மின்சார வாகனங்களை பயன்படுத்துபவர்களின் நம்பிக்கை அதிகரிப்பதுடன், புதிய மின்சார வாகனங்கள் அறிமுகம் ஆவதற்கான வாய்ப்பும் ஏற்படும் என்று தெரிவித்தார்.

பேட்டரி வாகனங்களுக்காக தமிழகத்தில் 256 இடங்களில் சார்ஜிங் மையங்கள் அமைக்கப்பட உள்ளன. அதன்படி, சென்னையில் 141-ம், கோவையில் 25-ம், மதுரையில் 50 சார்ஜிங் மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதுதவிர வேலூர், சேலம், ஈரோடு மற்றும் தஞ்சையிலும் தலா 10 சார்ஜிங் மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here