செயற்கை இதயம் (magnetic suspension) செயல்படும் சாதனை.

0
379

இதயம் செயலிழந்த ஒருவருக்கு, மருத்துவர்கள் மேக்னெட்டிக் சஸ்பென்சன் (magnetic suspension) மூலம் இயங்கும் செயற்கை இதயத்தை பொருத்தி சாதனை படைத்துள்ளது சீனா.

மேக்னெட்டிக் சஸ்பென்சன் (magnetic suspension):

சீனாவைச் சேர்ந்த ஷின் என்ற இளைஞர், இதய செயல்பாடு குறைந்ததால் அவரால் மூச்சு விடமுடியாத நிலை ஏற்பட்டது. மேலும் இதய மாற்று அறுவை சிகிச்சையையும் உடனே மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவமனை, மேக்னட்டிக் சஸ்பென்ஷன் மூலம் இயங்கும் செயற்கை இதயத்தை பொருத்த முடிவு செய்தது.
இதற்கு ஷின் ஒப்புக்கொண்டதை தொடர்ந்து, அறுவை சிகிச்சை மூலம் செயற்கை இதயம் பொருத்தப்பட்டது. தற்போது வழக்கமான பரிசோதனைக்கு வந்து செல்லும் அவர், செயற்கை இதயம் பொருத்தப்பட்டது தனக்கு மிகுந்த பயனுள்ளதாக இருப்பதாக குறிப்பிட்டார்.

சீனாவில் இதுவரை 7 பேருக்கு மேக்னெட்டிக் சஸ்பென்சன் மூலம் இயங்கும் செயற்கை இதயம் பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here