ரஷ்யாவில் மகாத்மா காந்தியின் தபால் தலை வெளியீடு

0
52

ரஷ்யாவில் மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாளையொட்டி சிறப்பு தபால் தலை வெளியிட உள்ளதாக  அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

மோடியின் பயணம்:

ரஷ்யாவின் விளாடிவோஸ்டோக் நகரில் நடைபெற்ற கிழக்கு பொருளாதாரக் கூட்டமைப்பின் இரண்டு நாள் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது ரஷ்ய அதிபர் புதினை பிரதமர் மோடி சந்தித்தார். அந்த சந்திப்பின் போது வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம் என பல்வேறு அம்சங்கள் குறித்தும் இந்தியா- ரஷ்யா இடையேயான உறவை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

 மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த நாளின் சிறப்பு:

இரு நாட்டின்,  இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரஷ்யாவின் இந்திய தூதர் வெங்கடேஷ் சர்மா, மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த நாளையொட்டி சிறப்பு தபால் தலை வெளியிட ரஷ்ய அரசு முடிவு செய்திருப்பதாகவும், இதனை அதிபர் புதின் அறிவித்துள்ளதாகவும் கூறினார். இந்தியாவின் தேசத் தந்தை காந்தியின் பிறந்த நாளில் அவரை கவுரவப்படுத்தும் ரஷ்ய அரசுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் கூறினார்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here