தமிழ் நாட்டில் உள்ள முருகன் கோயில்கள் பற்றிய அறிய தகவல்கள்!

0
195

முருகன் அல்லது கார்த்திகேயன் என்பவர் இந்து  கடவுளான  சிவன் மற்றும்  பார்வதி  தம்பதிகளுக்கு மகனாவார்.  சிவபெருமான் தனது முகத்திலிருந்தும் நெற்றிக்கண் நெருப்பினை வெளியிட, அதை தாங்கிய வாயு பகவான் சரவணப்பொய்கை ஆற்றில் விட்டார். அந்த நெருப்புகள் ஆறு குழந்தைகளாக கார்த்திகை பெண்களிடம் வளர்ந்தனர். அன்னையான பார்வதி ஆறு குழந்தைகளையும் ஒருசேர அணைக்கும் பொழுது, ஆறுமுகனாக முருகன் தோன்றினார் என்று இந்துசமய நூல்கள் கூறுகின்றன.

முருகனுக்கு இந்திரன் மகளான தெய்வானை என்ற மனைவியும், குறத்திப் பெண்ணான வள்ளி என்ற பெண்ணும் மனைவிகளாவர். தமிழர்களின் குறிஞ்சி நிலத்தெய்வமான சேயோன் வழிபாட்டினை சைவ சமயம் இணைத்துக் கொண்டதாகவும் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.

இவரை அதிகம் வழிபடுபவர்கள்  தமிழர்களே; இதனால், இவர் தமிழ்க் கடவுள் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் அன்பின் ஐந்திணையில் தலையாயதாகிய குறிஞ்சி நிலத்தின் கடவுள் ஆவார். பண்டைய காலத்தில்  கௌமாரம் எனும் தனித்த மதமாக இருந்த முருகன் வழிபாடு பின்பு இந்த சமயத்துடன்ன் இணைந்தது.

தமிழ் நாட்டில் உள்ள முருகன் கோயில்கள் பற்றிய அறிய தகவல்கள்:

  • தமிழ் நாட்டில் முருகனுக்கு 500 கோயில்களுக்கு மேல் உள்ளன.
  • பெரும்பாலான முருகன் கோயில்கள் மலைமேல் அமைந்துள்ளது.
  • 6 படை வீட்டில் முருகன், திருப்பரங்குன்றத்தில் அமர்ந்த கோலத்திலும், மற்ற 5 படை வீட்டில் நின்ற கோலத்திலும் அருளுகிறார்.
  • திருச்செந்துாரில் உள்ள 4 உற்சவர்களுக்கும் தனி சன்னதி உள்ளது.
  • தமிழகத்தின் அதிக வருமானமுள்ள கோயில் பழநி முருகனுக்கு ஆனி கேட்டையில் அன்னாபிஷேகம் நடக்கும்.
  • திருத்தணி முருகன் கோயிலில் யானை வாகனம் வெளியே பார்த்திருப்பது சிறப்பு.
  • 6 படைவீட்டில் உள்ள முருகன் 4 திசை நோக்கிய நிலையில் உள்ளார்.
  • கடலுார் கொளஞ்சியப்பர் கோயிலில் முருகன் சுயம்பு வடிவில் உள்ளார்.
  • சின்னாளபட்டி முருகன் நான்கு முகத்துடன் உள்ளார்.

 

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here