”என் தொழில் சினிமா; நேர்மையாக பணம் சம்பாதிக்க சினிமாவில் இருக்கிறேன்”- மக்கள் நீதி மய்யம் கமலஹாசன்.

0
86

நடந்து முடிந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தலில், தமிழகத்தின், 38 தொகுதிகளில் தனித்து போட்டியிட்ட, கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி பெரும்பாலும் மூன்றாம் இடத்தில் இருந்தது.

பொள்ளாச்சி, மத்தியச் சென்னை, தென் சென்னை, வட சென்னை , ஸ்ரீபெருமந்தூர், சேலம், திருப்பூர், கோயமுத்தூர், உள்ளிட்ட தொகுதியில் கனிசமான வாக்குகளை “மக்கள் மய்யம் கட்சி” பெற்று, ஒட்டு மொத்தமாக 15 லட்சத்திற்கும் மேலான ஓட்டுகளை பெற்றுள்ளது.

இந்நிலையில், சென்னை, ஆழ்வார்பேட்டை யில் உள்ள அலுவலகத்தில், மக்கள் நீதி மையம் தலைவர், கமல் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார்.

  • பிரதமராக பொறுப்பேற்கும் மோடிக்கும், அரசியல் மாண்பின் படி வாழ்த்து கூறுகிறேன். நாங்கள் எதிர்பார்த்ததை விட, கணிசமாக ஓட்டுக்கள் கிடைத்துள்ளன.
  • நாங்கள் பா.ஜ., வின், ‘பி டீம்’ இல்லை என்பது புரிந்திருக்கும்; நாங்கள், ‘ஏ டீம்’ என்பதே உண்மை.பா.ஜ.,வின் வெற்றி என்பது, மக்கள் அளித்த தீர்ப்பு; அது, தமிழக மக்களின் தீர்ப்பு அல்ல என்பதில் எனக்கு சந்தோஷம்.
  • நேர் வழியில் சென்றால், ஜெயிக்க முடியும் என்ற நம்பிக்கையை, மக்கள் தந்துள்ளனர். 14 மாத குழந்தையை நடக்கவும், ஓடவும் வைத்துள்ளனர். 14 மாதங்களில், எங்களால் என்ன செய்ய முடியுமோ, அதை வெற்றிகரமாக செய்துள்ளோம்.
  • இந்த தேர்தல் வாயிலாக, எங்கள் பயணம் நீண்டது என்பதையும், வறுமையை வெல்வது கடினம் என்பதையும் கற்றுக் கொண்டோம்.

  • தமிழகத்தை இந்தியாவின் ஒரு பகுதியாகவும், வளமாகவும் வைத்திருப்பது, வெற்றி பெற்ற அரசின் கடமை. வெற்றி பெற்ற மாநிலங்களுக்கு நிகராக, தமிழத்தையும் மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
  • புதிய தொழிற்சாலைகள், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை நாங்கள் வேண்டாம் என, சொல்லவில்லை. விவசாயத்தை அழித்து, தமிழகத்தில் திட்டங்களை செயல்படுத்த வேண்டுமா என, பார்க்க வேண்டும்.
  • மக்களிடம் எழுச்சியை உருவாக்குவது தான் எங்கள் இலக்கு. இதன் நடுவே, தேர்தல் வரும் போகும். தமிழகத்தை, முன்னோடி மாநிலமாக உருவாக்குவதே எங்கள் பணி.அரசியலை தொழிலாக நினைப்பது தவறு.
  • என் தொழில் சினிமா; நேர்மையாக பணம் சம்பாதிக்க சினிமாவில் இருக்கிறேன். இன்று, மூன்றாவது இடத்தில் நாங்கள் வராமல் இருந்தால், அதற்கான பணிகளில் இன்னும் தீவிரமாக பணியாற்றுவோம்.

போன்றவற்றை கமலஹாசன் கூறினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here