சீனாவில் கடும் மழையால் 49 பேர் உயிரிழந்துள்ளனர்.

0
277

சீனாவில் கடும் மழைப் பொழிவால் பெரும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் சுமார் 49 பேர் உயிரிழந்தனர். 8 மாகாணங்களில் 45 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

8 மாகாணங்களில் பாதிப்பு:

சீனாவின் தெற்குப் பகுதியில் உள்ள குவாங்ஸி (Guangxi) பகுதியில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
7 அடி உயரத்திற்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தினால் ஏராளமான கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. மேலும் பல இடங்களில் கடுமையான நிலச்சரிவும் ஏற்பட்டது.
மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் 8 மாகாணங்களில் 45 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 49 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 14 பேர் மாயமாகி உள்ளதாகவும் சீன அரசு தெரிவித்துள்ளது. இதனால் சீனா அரசு போர்கால நடவேடிக்கைகள் எடுக்கப்படுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here