சனி கிரகத்திற்கு இணையான அளவில் புதிய கோள் நாசா கண்டுபிடிப்பு!

0
35

சனி கிரகத்திற்கு இணையான அளவில் புதிய கோள் ஒன்றை  நாசா வின் செயற்கை கோள் கண்டுபிடித்துள்ளது.

சூரிய குடும்பத்திற்கு வெளியே, பூமியில் இருந்து ஆயிரத்து 300 ஒளிஆண்டுகள் தூரத்தில் இருக்கும் ஒரு கோளை நாசாவின் டெஸ் செயற்கைக் கோள் கண்டு பிடித்துள்ளது.

பிக்டர் என்ற நட்சத்திரக் கூட்டத்தில் உள்ள இந்த கோள், சனி கிரகத்திற்கு இணையான அளவில் உள்ளது. இந்த கோள் 2 நட்சத்திரங்களை சுற்றி வருவதாகவும், அதில் ஒன்று சூரியனை விட 15 சதவிகிதம் பெரியது என்றும் நாசா தெரிவித்துள்ளது.

இந்த கோளை கண்டுபிடிப்பதில் நாசா மையத்திற்கு பயிற்சி பெற சென்ற ஊல்ஃப் குகியர் ((Wolf Cukier)) என்ற பள்ளி மாணவன் முக்கிய பங்கை வகித்துள்ளான்.

கோடிக்கணக்கான கேலக்சிகளில் நிறைந்துள்ள நடசத்திரக் கூட்டங்களின் வெளிச்சத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை வைத்து அங்கு கோள்கள் உள்ளனவா என்பதை நாசாவின் டெஸ் செயற்கைக் கோள் கண்டுபிடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here