விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முயற்சியில் இஸ்ரோவுடன் இணைந்தது நாசா

0
144

விக்ரம் லேண்டருடன் தொடர்பு கொள்ளும் முயற்சியில் இஸ்ரோவுடன் நாசா இணைந்துள்ளது.

இஸ்ரோவுடன் கைக்கோர்த்த நாசா:

இஸ்ரோவின் சார்பில் நிலவின் தென்துருவத்துக்கு அனுப்பப்பட்ட சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டரின் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. லேண்டரை தொடர்பு கொள்ளும் முயற்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இஸ்ரோ சார்பில் லேண்டருடன் தொடர்பு கொள்ளும் முயற்சி பெங்களூரு அருகே உள்ள Byalaluவில் இருக்கும் Indian Deep Space Networkல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விக்ரம் லேண்டருடன் தொடர்பு கொள்ளும் முயற்சியில் இஸ்ரோவுடன் நாசாவும் கைகோர்த்துள்ளது.

நாசாவின் முயற்சி:

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா தனது Jet Propulsion ஆய்வகத்தில் இருந்து விக்ரம் லேண்டருக்கு ரேடியோ சிக்னல்களை அனுப்பி வருகிறது. வரும் 21ஆம் தேதி வரை விக்ரம் லேண்டர் இருக்கும் பகுதியில் சூரிய வெளிச்சம் இருக்கும் என்றும், அதுவரை லேண்டருடன் தொடர்ப்பு கொள்ளும் முயற்சி நடைபெறும் என்றும் இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நிலவை சுற்றி வரும் நாசாவின் ஆர்பிட்டர், வரும் 17ஆம் தேதி விக்ரம் லேண்டர் இருக்கும் பகுதிக்கு மேல் சுற்றி, லேண்டரை புகைப்படம் எடுத்து இஸ்ரோவுக்கு அனுப்ப உள்ளதாகவும், அதனை கொண்டு ஆய்வுகள் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here