சர்வதேச விண்வெளி மையத்தில் நாசாவை தொடர்ந்து ரஷ்ய வீரர்களும் பேட்டரி மாற்றுவதற்கான பணி தொடக்கம்

0
183

சர்வதேச விண்வெளி மையத்தில் நாசாவை தொடர்ந்து  ரஷ்ய வீரர்களும் பேட்டரி மாற்றுவதற்கான பணியில் நேற்று முதல் விண்வெளி வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சர்வதேச விண்வெளி மையத்தில் பேட்டரி மாற்றுவதற்கான பணி தொடக்கம்:

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 10 ஆண்டுகள் ஆயுள் கொண்ட 12 பழைய நிக்கல்-ஹைட்ரஜன் பேட்டரிகளை நீக்கிவிட்டு, நீண்ட ஆயுள் கொண்ட 6 புதிய லித்தியம் அயான் பேட்டரிகள் மாற்றப்படுகின்றன. புதிய பேட்டரி சுமார் 180 கிலோ எடைகொண்டதாகும்.

பரந்து விரிந்த விண்வெளியில் கரணம் தப்பினால் மரணம் எனும் ஆபத்தான இடத்தில் உரிய பாதுகாப்புக்களுடன் பேட்டரி மாற்றும் பணியில் விண்வெளி வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ரோபோவின் கைகள் 58 அடி நீளம் மட்டுமே செயல்படும் என்பதால், அதைவிட அதிக தூரத்தில் உள்ள பேட்டரிகளை மாற்ற விண்வெளி வீரர்களே அதை முன்னும் பின்னுமாக இழுத்துக் கொள்கின்றனர்.

நாசா 5 முறையும், அதனைத் தொடர்ந்து ரஷ்ய வீரர்களும் பேட்டரி மாற்றுவதற்காக திறந்த விண்வெளியில் பயணிக்க திட்டமிட்டுள்ளனர். அமெரிக்க-இத்தாலிய வீரர்கள் இணைந்து முக்கிய அறிவியல் சாதனங்களின் கோளாறுகளைச் சரி செய்ய மேலும் 5 முறை வரும் நவம்பர் டிசம்பர் மாதங்களில் பயணிக்கவுள்ளனர்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here