புது பொலிவுடன் டெஸ்லா மாடல் 3 மின்சாரக் கார்களின் புதிய ஒலிப்பான் சத்தம்

0
178

அமெரிக்க பாதசாரி பாதுகாப்பு விரிவாக்கச் சட்டம் 2010-ன் படி, 30 கிலோ  மீட்டருக்கும் குறைவான வேகத்தில் முன்னும் பின்னும் மின்சாரக் காரை இயக்கும் போது, அதன் வருகையை பாதசாரிகளுக்கு உணர்த்தி எச்சரிக்கும் வகையில் தெளிவாகக் கேட்கக் கூடிய சத்தத்தை ஒலிப்பானாகப் பயன்படுத்த வேண்டும்.

டெஸ்லா மாடல் 3 மின்சாரக் கார்களின் புதிய ஒலிப்பான் சத்தம்:

செப்டம்பர் 1-ம் தேதி முதல் உற்பத்தி செய்யப்பட்ட டெஸ்லா மாடல் 3 மின்சாரக் கார்களின் ஒலிப்பான் சத்தம் குறித்து அந்நிறுவன தலைமைச் செயலதிகாரி எலான் மஸ்க் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

பயனுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்ட ஒலிப்பான்கள் மற்றும் நகர்ந்து வருதலைக் குறிக்கும் சப்தங்கள் டெஸ்லாவில் விரைவில் வரும் எனக் கூறியுள்ளார். மான்டி பைதான் அண்டு த ஹோலி கிரேய்ல் படத்தில் வருவது போன்று குதிரைகளின் பிளம்படிச் சத்தமும் அதில் இடம்பெற்றிருக்கும் என அடைப்புக்குறிக்குள் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் மனித வாயு வெளியேற்றத்தைக் குறிக்கும் காற்றையும், ஆட்டையும் எமோஜிக்களாகக் குறிப்பிட்டு அந்த சத்தங்களும் பயனரின் தேர்வு வாய்ப்பாக இருக்கும் என தெரிவித்துள்ளார். இதுபோன்ற சத்தங்களை ஒலிப்பானாகப் பயன்படுத்த சமூக வலைதளங்களில் சிலர் எதிர்ப்பு தெரிவித்தாலும், பாதசாரிகளை எச்சரிக்க இது பயனுள்ளதாக அமையும் என பலர் ஆதரவுக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here