கீழடியில் விரைவில் 6 ஆம் கட்ட பணிகள் தொடங்குவதற்கு அனுமதி – தமிழக அமைச்சர்

0
182

உலக வரலாற்றை  மாற்றும் கீழடியில் 5 ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் 3 வாரத்தில் முடியவுள்ளநிலையில் 6 ஆம் கட்ட பணிகள் தொடங்குவதற்கு விரைவில் அனுமதி அளிக்கப்படும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களை அமைச்சர் தெரிவிப்பது:

கீழடி மட்டுமின்றி தமிழ் வளர்ச்சி துறை, கலை பண்பாட்டு துறை, தொல்லியல் துறை, அருங்காட்சியகம் ஆகிய 4 துறைகளின் திட்டங்களுக்கு அனுமதி பெற மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசியதாக தெரிவித்தார்.

மேலும் தமிழக விமான நிலையங்களுக்கு வந்து செல்லும் விமானங்களில் தமிழில் அறிவிப்பு வெளியிடுவதற்கான கோரிக்கையும் மத்திய அரசிடம் முன்வைக்கப்பட்டுள்ளது என்றார்.

கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க மாநில அரசு நிதி ஒதுக்கியுள்ளது என்றும் மத்திய அரசிடம் 15 கோடி ரூபாய் நிதி கேட்டுள்ளதாகவும் அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

 

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here