சீனா உதவியுடன் 2022-ல் பாகிஸ்தான் வீரரை விண்வெளிக்கு அனுப்ப திட்டம்

0
23

சீனா உதவியுடன் 2022 –ஆம் ஆண்டில் பாகிஸ்தான் வீரரை விண்வெளிக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் சௌத்ரி பவாத் ஹுசைன் அறிவித்துள்ளார்.

பாகிஸ்தான் வீரரை விண்வெளிக்கு அனுப்ப திட்டம்:

சீனாவுடன் இணைந்து 2022-ல் முதன் முறையாக பாகிஸ்தான் வீரரை விண்வெளிக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக, பாகிஸ்தான் நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் சௌத்ரி பவாத் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

விண்வெளி வீரருக்கான தேர்வு 2020ம் ஆண்டு தொடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். முதலில் 50 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதில் 25 பேர் தெரிவு செய்யப்பட்டு, அவர்களில் ஒருவர் இறுதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு விண்வெளிக்கு அனுப்பப்படுவார் என்றும் பாகிஸ்தானின் அமைச்சர் கூறியுள்ளார்.

இந்தியாவும், பாகிஸ்தானும் இணைந்தால் கிடைக்கும் நன்மைகள்:

விண்வெளி வீரரை தேர்ந்தெடுப்பதில் பாகிஸ்தான் விமானப்படை முக்கிய பங்காற்றும் எனவும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையில் இந்தியாவும், பாகிஸ்தானும் இணைந்து செயல்பட்டால் மேலும் பல நன்மைகள் ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு, சீன ஏவுகணை வாகனத்தைப் பயன்படுத்தி உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு செயற்கைக்கோள்களை பாகிஸ்தான் செலுத்தியது. சந்திரயான்-2 விண்கலத்தை வெற்றிகரமாக இந்தியா செலுத்தியதையடுத்து பாகிஸ்தான் தற்போது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here