அத்திவரதரை தரிசிக்க இந்திய குடியரசு தலைவர் இன்று வருகை!

0
105

கோவில்களின் நகரமான காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை காட்சி அளிக்கும் அத்திவரதரை தரிசிக்க இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வருகை தரவுள்ளார். அத்திவரதர் தரிசனத்துக்கு குடியரசு தலைவர் வருகை தர இருப்பதையொட்டி தரிசன நேரம் குறைக்கப்பட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அத்தி வரதர் உற்சவத்தின் 12 ஆம் நாள் :

அத்தி வரதர் உற்சவத்தின் 12 ஆம் நாளான இன்று அத்தி வரதருக்கு காவி நிற பட்டாடை அணிவித்து திருவாராதனம் செய்யப்பட்டு, மலர்களால் அலங்கரித்து, அதிகாலை 5 மணி முதல் பக்தர்களுக்கு தரிசனம் அளித்து வருகிறார்.

பல மாநிலங்களில் இருந்து மக்கள் வருகை:

40 ஆண்டுகளுக்கு ஒரு முறை காட்சி அளிக்கும் அத்திவரதரை தமிழகம் மட்டுமல்லாது, கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் அதிகாலையில் இருந்தே நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். வாழ்நாளில் இரண்டு முறை மட்டுமே அத்திவரதரை தரிசிக்க முடியும் அதன் காரணமாக ஏராளமான மக்கள் காஞ்சிபுரத்துல் இருக்கும் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை காட்சி அளிக்கும் அத்திவரதரை தரிசிக்க அனைத்து மாநில மக்களும் வந்த வண்ணம் உள்ளனர்.

11 வது நாளான நேற்று:

11 வது நாளான நேற்று வரை 12 லட்சத்து 35 ஆயிரம் பேர் சுவாமியை தரிசித்துள்ளதாகவும், நேற்று ஒரே நாளில் ஒரு லட்சத்து 15 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதுடன், கடந்த 4 நாட்களில், 4 லட்சத்து 50 ஆயிரம் பக்தர்கள் தரிசித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்திய குடியரசு தலைவர் வருகையை யொட்டி கோவிலைச்சுற்றிலும் பலத்தபாதுகாப்பு ஏற்பாடுகள்:

12 ஆம் நாளான இன்று குடியரசு தலைவர் வருகையை யொட்டி காஞ்சிபுரத்தில் கோவிலைச்சுற்றிலும் பலத்தபாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதுடன், பிற்பகல் 1 மணிமுதல் மாலை 5 மணிவரை பொது தரிசனமும், காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை விஐபி தரிசனம் நிறுத்தி வைக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here