பிரதமர் நரேந்திர மோடி – சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையின் அதிகாரபூர்வ அறிவிப்பு

0
237

வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வுகாக கருதப்படும் பிரதமர் நரேந்திர மோடி – சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையிலான சந்திப்பின்போது, உடன்பாடுகள், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு:

சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகிற 11ஆம் தேதி, தமிழ்நாட்டிற்கு வருகை புரிய இருப்பதாகவும், 11ஆம் தேதியும், 12ஆம் தேதியும், இருவரும் சந்தித்து பேச இருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது. இரண்டாவது முறையாக, சீன அதிபர்-மோடி இடையிலான சந்திப்பு நடைபெற இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது. கடந்தாண்டு ஏப்ரல் மாதம் சீனாவின் ஊகான் நகரில், பிரதமர் நரேந்திர மோடி – சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே சந்திப்பு நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, இரண்டாவது முறையாக, வருகிற 11ஆம் தேதி, தமிழ்நாட்டின் மாமல்லபுரத்தில், இருபெரும் தலைவர்களும் சந்திக்க இருப்பதாக, இந்திய வெளியுறவுத்துறை கூறியிருக்கிறது.

வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு:

பிரதமர் மோடி – ஜி ஜின்பிங் இடையேயான சந்திப்பின்போது, இருநாடுகளுக்கிடையிலான உறவுகள், பரஸ்பர உடன்பாடுகள், பிராந்திய, மற்றும் பன்னாட்டு அளவிலான விவகாரங்கள் குறித்து, விவாதிக்கப்பட வாய்ப்பு ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், சீன அதிபர் ஜி ஜின்பிங், தமிழ்நாட்டிற்கு வருகை புரிவதாகவும், வெளியுறவுத்துறை கூறியிருக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி – சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையிலான சந்திப்பினை, இந்தியாவுக்கான சீன தூதர் சன் வெய்டாங்கும் (Sun Weidong) உறுதிப்படுத்தியிருக்கிறார்.

சீன தூதர் ட்விட்டர் பதிவு:

டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சீன தூதர், பிரதமர் மோடி-ஜி ஜின்பிங் இடையிலான நட்பு, அவர்களது தீர்க்கமான வழிகாட்டுதல் ஆகியவை, இருநாடுகளுக்கு இடையிலான உறவில் புதிய அத்தியாயம் படைக்கும் என தாம் நம்புவதாகவும், தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி – சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையிலான சந்திப்பின்போது, உடன்பாடுகள், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பில்லை என தகவல் வெளியாகியிருப்பதாக, ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டிருக்கிறது. சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன், அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர், பொலீட்பீரோ உறுப்பினர்களும் வருவார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன், பிரதமர் நரேந்திர மோடி, முதலில், தனியாக சந்தித்து பேசுவார் என்றும், பின்னர், இருநாடுகளின் உயர் அதிகாரிகள் முன்னிலையில், இருவரும் சந்தித்துப் பேசுவார்கள் என்றும் ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here