பிரேசிலில் மகளை போல் வேடமிட்டு சிறையிலிருந்து தப்பிக்க முயன்ற கைதி சிறை வளாகத்தில் தற்கொலை

0
221

பிரேசிலில், மகளை போல் வேடமிட்டு சிறையிலிருந்து தப்பிக்க முயன்ற கைதியை அதிகாரிகள் மடக்கி பிடித்த நிலையில், அவர்  தற்போது சிறை வளாகத்தில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

யார் இவர்?

பிரேசில், இயங்கி வரும் ‘ரெட் கமாண்ட்’ என்ற போதை கடத்தல் கும்பலின் தலைவனாக செயல்பட்டு வந்த கிளாவினோ டா சில்வா என்பவர், பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டதாக கூறி 73 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.இவர், ரியோ டீ ஜெனிரோ சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

அண்மையில் அவரை பார்க்க அவரது மகள் சென்றபோது, மகளை சிறைச்சாலையில் விட்டு விட்டு, மகளது உடையில் அவரை போல் வேடமிட்டு அங்கிருந்து தப்ப முயன்றார்.

எப்படி காவல்துறையினர் கண்டு அறிந்தார்?

மகளை போல் வேடமிட்டு சிறையிலிருந்து தப்பிக்க முயன்ற கைதியின் நடையில் இருந்த வித்யாசத்தை வைத்து அது சில்வா என அடையாளம் கண்ட அதிகாரிகள், அவரை மடக்கி பிடித்தனர்.

இந்நிலையில், நேற்று சிறையில் மனஉளைச்சலுடன் இருந்த சில்வா, படுக்கை விரிப்பை கொண்டு தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சிறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here