தெலுங்கில் ரீமேகில் அசுரன் – பச்சையம்மாள் கதாபாத்திரத்தில் பிரியாமணி

0
180

தமிழில் வெற்றிகரமான திரைப்படமாக அமைந்த அசுரன், தெலுங்கில் நாரப்பா-வாக ரீமேக் செய்யபடுகிறது. மேலும், தமிழ் சினிமாவில் நிறைய மாற்றங்கள் வந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக நடிகை பிரியாமணி கூறியுள்ளார்.

அசுரனில் மஞ்சு வாரியர் நடித்த பச்சையம்மாள் கதாபாத்திரத்தில், தெலுங்கு ரீமேக்கில் நடிக்கிறார் பிரியாமணி. இது குறித்து பேசியுள்ள அவர், அசுரனில் அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர். பச்சையம்மாள் கதாபாத்திரம் என் மனதுக்கு நெருக்கமான ஒன்று. எனவே தெலுங்கில் அந்த கேரக்டரில் நடிக்கும் நான், மிக சிறப்பான நடிப்பு திறனை வெளிப்படுத்துவேன்.

மேலும் நான் தேசிய விருது வாங்க காரணமாக இருந்த தமிழ் திரைத்துறையில் இருந்து ஏராளமான கதைகள் என்னை தேடி வந்தன. ஆனால் எனக்கான கதாபாத்திரம் அதில் எதுவும் அமையவில்லை. அதனால் தான் தமிழில் நீண்ட இடைவெளி. இந்த இடைப்பட்ட காலத்தில் 5 பாட்டு, 2 சண்டை என்ற வணிக ரீதியான பாதையில் இருந்து விலகி வித்தியாச கதைக்களம், புதுமையான திரைக்கதை என பல விதங்களில் தமிழ் சினிமா முன்னேற்றம் கண்டுள்ளது என கூறியுள்ளார் நடிகை பிரியாமணி.

தலைவி படத்தில் நான் நடிக்கிறேனா இல்லையா என்பது உள்ளிட்ட பல தகவல்களை விரைவில் அந்த படக்குழு வெளியிடும் என கூறியுள்ளார்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here