காஷ்மீர் விவாகரத்தில் இந்திய பிரதமரை ஆதரிக்கும் ரஷ்யா அதிபர்

0
184

இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டே காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அதனை ஆதரிப்பதாகவும் ரஷ்யா  அதிபர் தெரிவித்துள்ளது.

காஷ்மீர் பிரச்சனை குறித்து ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் அளிக்கப்பட்டுள்ள பதிலில் காஷ்மீர் மாநிலத்தில்   மாற்றங்களுக்கு வழி வகுக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து மற்றும் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட விவகாரம் ஆகியவற்றைச் சார்ந்து இந்தியாவோ, பாகிஸ்தானோ நிலைமையை மேலும் மோசமடைய அனுமதிக்காது எனவும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா பாகிஸ்தான் இடையே இயல்பு நிலை திரும்பவேண்டும் என எப்போதுமே விரும்பும் நாடு ரஷ்யா என்றும், இரு நாடுகள் இடையேயான பிரச்சினைகளுக்கு சிம்லா ஒப்பந்தம் மற்றும் லாகூர் பிரகடனத்தின் அடிப்படையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் என நம்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here