சான் ஆண்டோனியோ: அமெரிக்காவின் பனித்துளிகளில் மலர்ந்த மல்லிகை மலர்!!

0
610

மதுரை மல்லியின் வாசம்…

சான் ஆண்டோனியோவில் வீசும் நேரம் இது!!!

பனித்துளிகளில் மலர்ந்த மல்லிகை மலரின் கதை!!”

           ஆதவனிடம் ஒளிபெறும் சந்திரன் போல, சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கத்தின் மூலம் மல்லிகை மலர் இதழ் வெளியிடப்பட்டுள்ளது. மல்லிகை மலர் இதழ் கடந்த 2018 ஆம் ஆண்டு மலர்ந்தது. இந்த இதழ் ஒரு வருடத்தில் மூன்று முறை மலரும், மலர் மலரும் காலம் தமிழ்ப் புத்தாண்டான ஏப்ரல் 14, சுதந்திர தினமான ஆகஸ்ட் 15, மற்றும் பாரதியாரின் பிறந்த நாளான டிசம்பர் 11-ம் தேதிகளில் மல்லிகை மலர் இதழ், தமிழ்ச் சங்கத்தின் மூலம் வெளியிடப்படுகின்றன.

சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கம்:

சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கத்தில் அமெரிக்க வாழ் தமிழர்களால் உருவாக்கப்பட்ட இச்சங்கத்தின் நோக்கம், நம் தாய்நாட்டின் கலை, கலாச்சாரத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வது. சான் ஆண்டோனியோவில் 2005-ம் ஆண்டு தமிழ்ப்பள்ளி தொடங்கப்பட்டது. பின்பு தமிழர்களின் எண்ணிகை அதிகரிப்பால் 60 க்கு மேற்பட்ட மாணவர்கள் தமிழ் பயின்று வருகிறார்கள்.

சாதி, மத, மொழி எவ்வித வேற்றுமையும் இன்றி அனைவரும் ஒன்றுபட்டு வாழ்வது சான் ஆண்டோனியோவின் முக்கிய அம்சம்.

 தமிழ்நாட்டில் நடக்கும் தைப்பொங்கல் முதல் தீபாவளி, சித்திரைத் திருவிழா என அனைத்தும் கொண்டாப்படுகின்றன. சான் ஆண்டோனியோ சங்கத்தில் உள்ள மக்கள்.

இந்தியாவில் கொண்டாடப்படும் அனைத்து விழாக்களும் கொண்டாடி வருகிறார்கள்.

இதழின் முக்கியத்துவம்:

  • ஆண்டோனியோவில் வாழும் தமிழ் மக்களின் திறமைகளை வெளிப்படுத்தும் தடமாக மல்லிகை மலர் அமையும் என்ற நம்பிக்கையுடன் தொடங்கப்பட்டுள்ளது.
  • குழந்தைகளின் ஓவியம், கவிதை, கட்டுரைகள் போன்ற திறமைகளை எல்லாம் வெளிக்கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறார்கள்.
  • அதுமட்டுமில்லாமல் இல்லத்தரசிகள் பொழுதுபோக்குகளை தங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில், சமையல் குறிப்புகள் மற்றும் கதைகள், கட்டுரைகள் எல்லாம் மல்லிகை மலரில் பதிவிடப்படுகின்றன.
  • ஆன்மீக சம்பந்தமான கோவில்கள் பற்றிய விவரங்கள், நம் கலாச்சாரத்தைப் பற்றிய புராணக் கதைகள் எல்லாம் தொகுத்து மல்லிகை மலர் இதழில் வெளியிடப்படுகின்றது.

மல்லிகை மலர் ஆசிரியர்:

”பயணம் எங்கு தொடங்கும், புது வாழ்க்கை அங்கே மலரும்”.என்ற கவிதை போல், இவரது பயணவாழ்க்கை தமிழகத்தில் இருந்து அமெரிக்கா வரையிலானது , இவரது பயணம் இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இந்தப் பயணத்தின் ஒரு அங்கமான,  சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கத்தின் தோட்டத்தில் மல்லிகை மலரை மலர வைத்த பெருமைக்குரியவர் ஷீலா ரமணன்.  இவர் அமெரிக்க பத்திரிகையாளராக தினமலர் நாளிதழில் பணிபுரிகிறார். இவர் கவிதை, கதை தவிர ,பயணத்தில் மிகவும் ஆர்வமுடன் இருப்பதனால். பயணக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

இவர் எழுதிய கட்டுரைகளைப் படிக்கும் மக்கள் மிகவும் ஆர்வமுடன் அவர்களும் பல பயணம் மேற்கொள்ளுகிறார்கள். என்று இவர் சொல்லும் போது நமக்கும் பயணம் செல்ல வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது. இவருக்கு  ஓவியத்திலும் ஆர்வம் கொஞ்சம் அதிகமாக இருப்பதால், தனக்கு கிடைக்கும் நேரத்தில் சிறுவர்களுக்கு ஓவியம் போன்ற வகுப்புகளும் எடுத்து வருகிறார்.

சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கத்தின் மூலம் சித்திரைத் திருவிழா வரும் ஏப்ரல் 27 ம் தேதி நடைபெறவுள்ளது. அமெரிக்க வாழ் மக்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்க வருமாறு சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கம் வரவேற்கிறது.

மேலும் விவரங்களுக்கு:

https://satamilsangam.org/newsletter?fbclid=IwAR045lrsIngXrAPWMqvjx73RIGR_dhUN0uc-I4umcykDGW4JJ0ruEulgHls

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here