ஸ்ரீலங்கா வெடிகுண்டுத் தாக்குதல்: சிங்கள அரசே காரணமாக இருக்கும் -தமிழ் அமைப்புகள் குற்றச்சாட்டு:

0
105

ஸ்ரீலங்காவில் ஈஸ்டர் நாளன்று நிகழ்த்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதல்களை, சிங்கள பௌத்த பேரினவாத அரசே திட்டமிட்டு நடத்தி இருக்கக்கூடும் என்று ஜெனிவாவிலிருந்து செயல்படும் தமிழ் அமைப்புகள் குற்றம் சாட்டி உள்ளன.

கடந்த ஈஸ்டர் நாளன்று நிகழ்த்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். காட்டுமிராண்டித்தனமான இந்த தாக்குதலுக்கு ஸ்ரீலங்காவில் இருந்து செயல்படும் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளது.ஐ.எஸ் அமைப்பும் பொறுப்பேற்றுள்ளது

இந்நிலையில் ஸ்ரீலங்கா மக்களின் கவனத்தை, நாட்டின் பிரச்சனைகளில் இருந்து திசை திருப்புவதற்காக, சிங்கள பௌத்த பேரினவாத அரசே இந்தக்கொடுமையை அரங்கேற்றி இருக்கக்கூடும் என்று ஜெனிவாவிலிருந்து செயல்படும் தமிழ் அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. மேலும், தமிழ் பகுதிகளில் ஏதும் அசம்பாவிதம் ஸ்ரீலங்கா அரசே பொறுப்பேற்க வேண்டும் என்றும் எச்சரித்துள்ளன.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here