தாய்லாந்தில் மன அழுத்தத்தால் தவிக்கும் கொரில்லா குரங்கு

0
255

தாய்லாந்து  நாட்டில் உள்ள உயிரியல் பூங்காவில் அடைக்கப்பட்டுள்ள கொரில்லா குரங்கு மன அழுத்தத்தால்  தவித்து வருகின்றது. கொரில்லா குரங்கு  மன  அழுத்ததை போக்க தனது முடியை தானே பிய்த்துக் கொண்டு தரையில் உருளும் காட்சிகள்  தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

மன அழுத்தத்தால் தவிக்கும் கொரில்லா குரங்கு:

தாய்லாந்தின் பாங்காக்கில் உள்ள படா (Pata) என்ற வன உயிர்பூங்கா ஷாப்பிங் மால் ஒன்றின் 7-வது தளத்தில் அமைந்துள்ளது. இங்கு கடந்த 1992-ம் ஆண்டில் இருந்து ஜெர்மனியில் இருந்து வாங்கப்பட்ட கொரில்லா குரங்கு அடைக்கப்பட்டுள்ளது.

3 வயது குட்டியாக வந்த அந்தக் குரங்கு, 27 ஆண்டுகளாக ஒரே கூண்டில் அடைக்கப்பட்டுள்ளன. சுகாதாரமற்ற சூழலாலும், போதிய ஆவணங்கள் இல்லாததாலும் அந்த பூங்காவை கடந்த 2015-ம் ஆண்டே மூட உத்தரவிடப்பட்டது.

இருப்பினும் தொடர்ந்து இயங்கி வரும் நிலையில் 27 ஆண்டுகளாக சிறைபட்டிருக்கும் கொரில்லா குரங்கு எப்போதும் சோகமயமாய் காட்சி அளிப்பதுடன் அதிக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு தனது தலைமுடியை தானே பிய்த்துக் கொண்டு, தரையில் படுத்து புரள்கிறது.

மன அழுத்தத்துக்கு ஆளாகி உள்ள கொரில்லாவை சுதந்திரமாக வனத்துக்குள் விடுவித்து, வன உயிர் பூங்காவை மூட வேண்டும் என விலங்குகள் நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here