உலகிலேயே அதிகமான ஊட்டச்சத்துகள் கொண்ட உணவுப்பட்டியலில் பழையசோறு முதலிடம் : அமெரிக்க விஞ்ஞானி ஆய்வின் முடிவு

1
1686

”பிரியாணி கூட இரண்டு மணி நேரத்துல கிடைக்கும், ஆனா பழைய சோறு வேணும்னா ஒரு நாள் காத்து இருக்கணும்னு” சொல்லுவாங்க நம்ம வீட்டு பெரியவங்க! ஆமாங்க அது உண்மை தான்.

நம்ம கிராமப் புறங்களில் பார்த்து இருப்போம், காடு, மேடு-னு போயி உழைக்கிறவங்க, காலையில வீட்டில இருக்குற பழைய சோறு, வெங்காயம் கடிச்சு சாட்பிட்டு போவாங்க. மாடு போல உழைக்குறவங்களுக்கு  இந்த பழையசோற்றின் அருமை தெரியும். நம்ம ஊருல  பழைய சோற்றுத் தண்ணீரை, நீராகாரம்-னு சொல்லுவோம்.

பழைய சாதம் செய்வது எப்படி:

 

முதல் நாள்  சாதத்தில் நீரூற்றி, மறுநாள்  காலையில் பார்த்தா.  பழையச் சோறு ரெடி. நீரூற்றிய 15 மணி நேரத்துக்குள் சாப்பிட்டுவிடுவதுதான் ஆரோக்கியம்’ என்கிறார்கள் மருத்துவர்கள்.

அப்படி என்ன இருக்கு பழைய சோறுல நினைக்கிறிங்களா, வடித்த சாதத்தில் 3.4 மி.கி இரும்புச்சத்து இருக்கிறது  என வைத்துக்கொள்வோம். அதுவே, பழைய சாதமாகும்போது, இரும்புச்சத்தின் அளவு 73.91 மி.கிராமாக இருக்கும்.

பழைய சாதம் சாப்பிட்டால் தூக்கம் வரும்,  உடல்பருமன் உண்டாகும் என்பதெல்லாம் உண்மையல்ல;  இது,  எல்லா உணவுகளுக்குமே பொருந்தக்கூடியது.

பழைய சோறு  லேசாக புளிப்புச் சுவையோடு  இருக்கும்.  அதற்கு காரணம், சாதத்தில் உருவாகும் லேக்டிக் ஆசிட் பாக்டீரியாதான் (Lactic Acid Bacteria)  அத்தான் புளிப்புச் சுவையைத் தருகிறது.

பழையச் சோறின் நன்மைகள்:

  • பழைய சோறில் வேறு எந்த உணவுப் பொருட்களிலும் கிடைக்காத வைட்டமின் பி6, பி12 ஆகிய சத்துகள் அதிகளவில் நிரம்பியுள்ளன.
  • பழைய சோறில் லட்சக்கணக்கான பாக்டீரியாக்கள் நிரம்பியுள்ளதால் இதை உட்கொள்வதன் மூலம் செரிமான பிரச்சனைகள் நீங்கி, செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும்.
  • பழைய சோறில் நோய் எதிர்ப்பு காரணிகள் அதிகளவில் இருப்பதால், உடலை பாதுகாப்பதோடு, உடலை தாக்கும் நோய்க் கிருமிகளிடமிருந்தும் காப்பாற்ற வகை செய்கிறது.
  • காலையில் இதைச் சாப்பிடுவதால், வயிறு தொடர்பான நோய்கள் குணமாகும்; உடலில் அதிகமாக இருக்கும் உஷ்ணத்தைப் போக்கும்.
  • ரத்த அழுத்தம் சீராகும்; உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு அதைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தணியச்செய்யும்.
  • ஒவ்வாமைப் பிரச்னைகளுக்கும், தோல் தொடர்பான வியாதிகளுக்கும் நல்ல தீர்வுதரும்.
  • எல்லாவிதமான வயிற்றுப் புண்களுக்கும் பழைய சோறு வரப்பிரசாதம் ஆகும்.

பழைய சோறு இருக்கும் இடம், ஆரோக்கியம் குடியிருக்கும் இடம். தமிழர் பாரம்பர்யம் ஆரோக்கியத்தைப் போற்றிப் பாதுகாத்துவந்தது என்பதை நிரூபிக்கும் மற்றுமோர் ஆதாரம்,  பழைய சோறு. பாரம்பர்யத்தைப் போற்றுவோம்! இனி கொஞ்சம்  பழையச் சோற்றுக்கு மாறிதான் பார்ப்போமே!!

1 கருத்து

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here