பிளாஸ்டிக் கழிவுகளில் சிக்கி தவிக்கும் தாய்லாந்து நாட்டு கடற்பசு

0
28

தாய்லாந்து கடலில் கரையொதுங்கிய கடற்பசு குடலில் பிளாஸ்டிக் சிக்கியிருந்ததால், உடல்நலம் குன்றி உயிரிழந்தது.

கடலில் கூவியும் டன்கணக்கான பிளாஸ்டிக் கழிவு:

உலக நாடுகளின் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பால் ஆண்டுதோறும், கடலில் சேரும் பிளாஸ்டிக் கழிவுகளின் அளவு பல டன்களாக உயர்ந்து வருகிறது. இதனை குறைக்க தற்போது, தாய்லாந்து உள்ளிட்ட 10 தென்கிழக்கு ஆசிய நாடுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்தநிலையில், கடந்த வாரம் தாய்லாந்து கடற்கரை பகுதியில் நீர்வாழ் பாலூட்டி உயிரினமான கடற்பசு கரையொதுங்கியது.

இந்த உயிரினம் இதற்கு முன் கடந்த ஏப்ரல் மாதம் பல முறை காயங்களுடன் வந்திருந்ததால், அதனை அன்புடன் கவனித்த கடல்சார் உயிரினங்களை பாதுகாக்கும் அதிகாரிகள், அதற்கு ‘மரியம்’ என பெயரிட்டு, சிகிச்சை அளித்து, மீண்டும் கடலுக்குள் அனுப்பி வைத்தனர்.

தற்போது மீண்டும் கரைதிரும்பிய ‘மரியத்துக்கு’ அதிகாரிகள் கடல் பாசி உள்ளிட்ட உணவு அளித்தும் சாப்பிடாமல் இருந்த நிலையில்,சனிக்கிழமை உயிரிழந்தது. அதன் உடலை உடற்கூராய்வு செய்ததில், குடலில் பிளாஸ்டிக் துண்டுகள் இருந்ததும், பிளாஸ்டிக்கால் அது உயிரிழந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

உயிருக்குப் போராடிய கடல் பசுவின் குட்டியை காப்பாற்றிய கடலாராய்ச்சியாளர்கள்:

தாய்லாந்தில், கடற்பசு அருகி வரும் உயிரினமாக இருப்பதால், அது பாதுகாக்கப்பட வேண்டிய 19 வனவிலங்குகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தாய்லாந்தில் பிளாஸ்டிக் பொருட்களை சாப்பிட்டு உயிருக்குப் போராடிய கடல் பசுவின் குட்டியை கடலாராய்ச்சியாளர்கள் காப்பாற்றி உள்ளனர்.

அந்நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள கடல் பரப்பில் கடல் பசுவின் 2 குட்டிகள் சுற்றி வந்தன. ஒன்பது மாதக் குட்டிகளான அவற்றில் ஒரு குட்டி மூச்சுத் திணறி உயிரிழந்தது. இதனைக் கண்ட கடல் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த சிலர் உடனடியாக அந்தக் குட்டியை பரிசோதித்த போது அதன் வயிற்றிலும், வாயிலும் பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மற்றொரு குட்டியை மீட்ட அந்தக் குழுவினர் அதற்கு உணவிட்டு வாயில் சிக்கியிருந்த பிளாஸ்டிக் பையை அகற்றி அதனைக் காப்பாற்றினர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here