ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய பவானிசாகர் அணை இன்று 65ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றது

0
66

ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய மண் அணை என்ற புகழ்பெற்ற பவானிசாகர் அணை,  ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பவானி ஆறும், மோயாறும் கலக்குமிடத்தில் 1955 ஆம் ஆண்டில் இதேநாளில் தான் கட்டப்பட்டது.

பவானிசாகர் அணை:

கோயம்பத்தூர் மாவட்டத்தின் மேட்டுப்பாளையம், சிறுமுகை வழியாக பாவனி ஆற்றுடன் நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் மோயாறு கலக்கும் இடத்தில் ”கீழ் பவானி திட்டம்” மூலம் அணை கட்டப்பட்டுள்ளது.

இந்த பவானி சாகர் அணை, ஒரு மண் அணையாகும். இந்த அணையின் உயரம்  சுமார்105 அடியாகும். இதன் கொள்ளளவு 33 கோடி கனஅடியாகும். இதன் நீர்ப்பிடிப்பு பகுதி 1621.5 சதுர மைல் ஆகும். நீர்தேக்கத்தின் பரப்பளவு 30 சதுர மைல்களாகும். இவ்வணையிலிருந்து செல்லும் கீழ் பவானி திட்ட கால்வாய் ஈரோடு மாவட்டத்தை வளப்படுத்தப்படுகின்றது.

பவானி சாகர் நீத்தேக்கம்:

பத்தரை கோடி ரூபாய் செலவில் 7 ஆண்டுகளுக்கு அணை கட்டுமானப் பணி நடைபெற்றது. இந்த அணையை அப்போதைய முதலமைச்சர் காமராஜர், நாட்டுக்கு அர்ப்பணித்தார். சுமார் 450 மீட்டர் நீளத்திற்கு கற்களால் கட்டப்பட்ட இந்த அணையில், 8.3 கிலோ மீட்டர் நீளம் கொண்ட கரைப் பகுதி மண்ணால் மெத்தப்பட்டது.

ஆசியவின் இரண்டாவது மிகப்பெரிய மண் அணை:

105 உயரம் கொண்ட பவானிசாகர் அணை, தமிழ்நாட்டில் மேட்டூருக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய அணையாக உள்ளது. அதேவேளையில் ஆசியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய மண் அணை என்ற பெருமையையும் தாங்கி நிற்கிறது. அணையின் மொத்த நீர்தேக்க பரப்பு 30 சதுர மைல்கள்.அணை கட்டுமானத்திற்காக லண்டனில் இருந்து எந்திரங்கள் கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது. 32.8 டிஎம்சி கொள்ளளவு நீரை இந்த அணையில் தேக்க முடியும்.

பவானிசாகர் அணையில் உள்ள புனல்மின் நிலையம்:

பவானிசாகர் அணையில் இரண்டு நீர் மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன, ஒவ்வொன்றும் 16 32 மெகாவாட் (43,000 ஹெச்பி) திறனைகொண்டு, மொத்தமாக ஐந்து மெகாவாட் (21,000 ஹெச்பி) ஒரு திறனோடு அமைந்துள்ளது.

பவானிசாகர் அணை நீரால் பாசனம் பெரும் மாவட்டங்கள்:

பவானி சாகர் அணையின் கொள்ளளவு 32.8 டி.எம்.சி ஆகும். பவானி சாகர் அணையின் மூலம் புதிய ஆயக்கட்டு 2.07 லட்சம் ஏக்கர் பாசனம் பெறுகிறது.  பவானிசாகர் அணை நீரால் கரூர், திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள இரண்டரை லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பயன்பெறுகின்றன. இப்படிப்பட்ட பெருமைகளைக் கொண்ட பவானிசாகர் அணை கட்டப்பட்டு இன்றோடு 64 ஆண்டுகள் நிறைவு பெற்றது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here