ஒருவரை ஒருவர் கன்னத்தில் அறைந்து கொள்ளும் வினோதமான போட்டி!

0
273

கிர்கிஸ்தானில் ஆண்கள் ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறைந்து கொள்ளும் வினோதமான  போட்டி பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்ததுள்ளது.

கன்னத்தில் அறைந்து கொள்ளும் போட்டி:

கன்னத்தில் அறைந்து கொள்ளும் வினோதமான  போட்டியை முன்னாள் குத்துச் சண்டை வீரரால் ஒருங்கிணைக்கப்பட்டது. இந்த போட்டியில் 15 ஆண்கள் பங்கேற்றனர். இதில் வெற்றி பெறும் நோக்கத்தைத் தவிர வேறு காரணம் ஏதும் இன்றி எதிர்முனையில் இருப்பவரைக் கன்னத்தில் ஓங்கி பளாரென அறைய வேண்டும்.

அந்த அடியை தவிர்க்காமல் பெற்றுக் கொண்டு நிலை தடுமாறாமல் நிற்க வேண்டும் என்பது விதி. அதன்பின், முதலில் அடி வாங்கிய நபர் திரும்ப தன் பலத்தைக் காட்டி சக போட்டியாளரின் கன்னத்தில் அறைய வேண்டும். இது போல் 5 முறை அடிக்க வேண்டும் என்ற நிலையில் ஒரு சிலர் நிலை தடுமாறிப் போயினர்.

போட்டியில் முதல் இடம் பிடித்த அமன் அய்டரோவ் (Aman Aytarov):

கன்னத்தில் அறைந்து கொள்ளும் வினோதமான  போட்டியில் 23 வயதான அமன் அய்டரோவ் என்ற இளைஞர் முதல் இடம் பிடித்து வென்றுள்ளான். மேலும் கன்னத்தில் அறையும் போட்டியில் பங்கேற்ற ஒருவருக்கு பல் உடைந்தது. மற்றொருவருக்கு கன்னம் வீங்கிப் போனது. தற்போது இந்த போட்டிகள் இணையத்தில் பரவி வைரலாகியுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here