பருவநிலை மாற்றத்தின் எதிரொலி ஐஸ்லாந்தில் முற்றிலும் உருகிய பனிப்பாறை

0
62

உலக வெப்பமயம் ஆகுதல் போன்ற முக்கிய காரணத்தினால்,பருவநிலை மாற்றத்தால் ஐஸ்லாந்தில் முற்றிலும் உருகியுள்ள முதல் பனிப்பாறைக்கு அப்பகுதி மக்களும், சூழலியல் விஞ்ஞானிகளும் இணைந்து துக்கம் அனுசரித்தனர்.

உருகும் பனிப்பாறைகள்:

உலக வெப்பமயமாதலால் ஐஸ்லாந்து நாட்டின் பல்வேறு பனிப்பாறைகள் உருகி வருகின்றன. ஓகேஜோகுல் என்ற பிரம்மாண்ட பனிப்பாறையும் 20ம் நூற்றாண்டு முதல் உருகி வந்தது. 1986ம் ஆண்டு எடுக்கப்பட்ட செயற்கைகோள் படத்தில், பிரம்மாண்ட பனிப்பாறையாக காட்சியளித்த ஓகேஜோகுல் முற்றிலும் உருகிய நிலையில், இவ்வாண்டு எடுக்கப்பட்ட புகைபடத்தில் சிறு சிறு திட்டுகளாக காட்சியளித்தது.

இந்நிலையில் முற்றிலும் உருகிய முதல் பனிப்பாறைக்கு துக்கம் அனுசரிக்கும் வகையில் விஞ்ஞானிகளும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், அப்பகுதி மக்களும் ஓகேஜோகுல் இருந்த இடத்தில் கூடினார்.

மேலும் பருவநிலை மாற்றத்தின் தீவிரத்தை எச்சரிக்கும் வகையிலான வாசகங்கள் அடங்கிய உலோக தகட்டை, அங்கிருந்த பாறையில் பதித்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here