மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சி னக்கு மறக்க முடியாத ஓர் அனுபவம் – நடிகர் ரஜினிகாந்த்

0
66

மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சி படப்பிடிப்பை தனக்கு மறக்க முடியாத ஓர் அனுபவமாக பியர் கிரில்ஸ் மாற்றித் தந்ததாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் பங்கேற்ற மேன் வெர்சஸ் வைல்டு என்ற டிவி நிகழ்ச்சியின் படப்பிடிப்பு கர்நாடக மாநில வனப்பகுதியில் நடைபெற்றது. இந்நிலையில், இது தொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த், படப்பிடிப்பை மறக்க முடியாத சிறந்த அனுபவமாக்கித் தந்தமைக்காக பியர் கிரில்சுக்கும், டிஸ்கவரி சேனலுக்கும் நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே டிஸ்கவரி சேனலும் ரஜினிக்கு நன்றி தெரிவித்துள்ளது. ரஜினி பங்கேற்றுள்ள சிறப்பு எபிசோடிற்கான கவுண்டன் தொடங்கியுள்ளதாகவும் டிஸ்கவரி சேனல் நிர்வாகம், ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here