உலகின் மிக வயதான மனிதர் மரணம்.

0
237

உலகின் மிக வயதான மனிதர் என்ற சாதனை படைத்த ரஷியாவைச் சேர்ந்த அப்பாஸ் இலியிவ், மரணம் அடைந்தார்.

123 வயதான அப்பாஸ் இலியிவ், 1896-ம் ஆண்டு ரஷியாவின் தன்னாட்சி பிராந்தியமான இங்குஷெத்தியாவில் பிறந்தவர்.

1917 முதல் 1922 வரை ரஷிய ராணுவத்தில் பணியாற்றிய அப்பாஸ் இலியிவ், தனது 45 வயதில் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றார். பச்சை காய்கறிகளையும், சுத்தமான பசுவின் பாலையும் தினசரி உணவாக கொண்டு வாழ்ந்து வந்தார். அத்துடன் மது, புகை போன்ற எந்த போதை பழக்கத்தையும் எடுத்துக்கொண்டதில்லை.  நாள் ஒன்றுக்கு சுமார் 11 மணி நேரம் தூங்கும் பழக்கம் கொண்ட இவர், இதுவரை மருத்துவமனைக்குச் சென்றதில்லை என்று கூறப்படுகிறது.

அப்பாஸ் இலியிவுக்கு 8 பிள்ளைகளும், 35 பேரப்பிள்ளைகளும், 34 கொள்ளுப் பேரப்பிள்ளைகளும் உள்ளனர் .

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here