சவப்பெட்டியில் பாசப்போராட்டம் நடத்திய உரிமையாளர் நாய்

0
257

பெரு நாட்டில் உயிரிழந்த உரிமையாளரின் சவப்பெட்டியின் மீதிருந்து முன்னங்கால்களை அகற்ற மறுத்த நாய் ஒன்றின் பாசப்போராட்டம் சமூக வலைதளங்களில் தற்போது  வைரலாகி வருகிறது.

பெரு நாட்டின் லீமாவில் நாய் ஒன்றைப் பாசத்தோடு வளர்த்து வந்த உரிமையாளர் திடீரென இறந்துவிட, மறுநாள் கண்ணாடிப் பேழை போன்ற சவப்பெட்டியில் அவரது உடல் வைக்கப்பட்டது. தான் ஆசையுடன் துள்ளி விளையாடிய நபர் தற்போது சவப்பெட்டியில் படுத்திருப்பதையும், தனது அழைப்புக்கு திரும்பாததையும் கண்ட அந்த நன்றியுள்ள ஜீவன், சவப்பெட்டியின் கண்ணாடி மீது வைத்த முன்னங்கால்களை அகற்றாமல் ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தது.

பெண் ஒருவர் அந்த நாயை அகற்ற முயன்றும், பிடிவாதமாக அந்த நாய் நகர மறுத்துவிட்டது. இந்த நெகிழ்ச்சி சம்பவம் தற்போது இணைய தளத்தில் வைரலாகி வருகின்றது.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here