இசைமேடையில் பாடியபடி உயிரிழந்தார் ஸ்பெயினில் நாட்டு பாடகி

0
223

ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற ஹாலிவுட் குழுவினரின் இசை நடன நிகழ்ச்சியில் ஜோனசு என்ற பாடகி இசைமேடையில் பாடியபடி உயிரிழந்தார்.

இசை மேடையில் நடந்த பரிதாபம்:

ஸ்பெயினில் மேடையில் லாஸ்பெர்லனாஸில் நடைபெற்ற திருவிழாவின் நிறைவாக சூப்பர் ஹாலிவுட் குழுவினரின் இசை நடன நிகழ்ச்சி இன்று அதிகாலை நடந்து கொண்டிருந்தது.

அப்போது சுமார் 2 மணியளவில் மேடையில் பாடிக் கொண்டிருந்த பாப் பாடகி ஜோனா செய்ன்ஸ்-ன் வயிற்றில்  சிறப்பு அலங்காரத்துக்குப் பயன்படுத்தப்படும் பைரோடெக்னிக் இயந்திரத்தில் இருந்து வெளிவந்த ராக்கெட் தாக்கியது.

இதில் பலத்த காயமடைந்த ஜோனசுக்கு சக கலைஞர்கள் உதவினர். விபத்து நடந்தவுடன் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டு மேடை திரையிடப்பட்டது. கூட்டத்தில் பார்வையாளராக இருந்த ஒரு மருத்துவர் ஜோனசுக்கு உதவினார். 20 நிமிடங்களுக்குப் பின் ஆம்புலன்ஸ் வந்து அவிலா மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு லாஸ் பெர்லனாஸ் மாநகராட்சி இரங்கல் தெரிவித்துள்ளதோடு இழப்பீடும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here